கொண்டு; படு களிறு ஆம் - துன்பப்படும் யானையாம்; எனக் கொதித்தான்- என்று சொல்லும்படி மனக்கொதிப்பு உற்ற இராவணன்;உடனே- அப்பொழுதே; பத்துச் சிலை எடுத்தான்- பத்துக் கரங்களால் பத்து விற்களை எடுத்தவனாய்; கணை தொடுத்தான்- அம்புகளைத் தொடுத்து; பல முகிலா- எண்ணற்ற மேகங்கள்; தொத்துப்படு நெடுந் தாரைகள்- தொகுதி தொகுதியாய்ப் பொழியும் நீண்ட தாரைகள்; சொரிந்தாலெனத் துரந்தான்- சொரிவது போல் (அம்புகளை) எய்தான். |
தொத்து - தொகுதி, கூட்டம். |
(56) |
| 9760. | ஈசன் விடு சர மாரியும், எரி சிந்துறு தறுகண் |
| நீசன் விடு சர மாரியும், இடை எங்கணும் நெருங்க, |
| தேசம் முதல் ஐம் பூதமும் செருக் கண்டனர் |
| செருக்கி, |
| கூசிம் மயிர் பொடிப்பு அற்றன; அனல் ஆயின |
| கொடிய. |
| |
ஈசன் விடு சரமாரியும்- எல்லாச் செல்வங்களுக்கும் தலைவனாகிய இராமன் எய்யும் அம்பு மழையும்; எரிசிந்துறு- நெருப்பைச் சொரிகிற; தறுகண் - கொடுமை மிக்க; நீசன் விடு சரமாரியும்- இழிந்த இராவணன் எய்யும் அம்பு மழையும்; இடை எங்கணும் நெருங்க - எல்லா இடங்களிலும் நெருக்கமாய் விழ; தேசம் முதல் ஐம் பூதமும்- நிலம் முதலாக அமைந்த ஐந்து பூதங்களும்; செருக் கண்டனர் செருக்கி- போர் கண்டு உற்சாகம் மேற்கொண்டு; கூசிம் மயிர்ப் பொடிப்பு அற்றன- புல்லரிப்பு உற்ற நிலை (மெல்ல) வாங்கின; கொடிய அனல் ஆயின - (ஏனெனில் அம்புகளின் நெருப்பால்) அவையும் கொடிய வெப்பம் பூண்டன. |
முதலில் களித்த ஐம்பூதங்கள் போரில் வெப்பத்தால் பின்னர் தத்தளித்தன. |
தேசம் - தேஜஸ் என்று கொண்டு நெருப்பென்பதும் உண்டு. |
(57) |
கலி விருத்தம் (வேறு) |
| 9761. | மந்தரக் கிரி என, மருந்து மாருதி |
| தந்த அப் பொருப்பு என, புரங்கள்தாம் என, |