பக்கம் எண் :

320யுத்த காண்டம் 

கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டென

அந்தரத்து எழுந்தது, அவ் அரக்கன் தேர்அரோ. 

 

(அப்பொழுது)    அவ்  அரக்கன் தேர்- அந்த  அரக்கனான
இராவணனின்   தேரானது;   மந்தரக்கிரி  என -   மந்தர  மலை
என்னுமாறும்;    மாருதி   தந்த  அ மருந்துப் பொருப்பு என 
அனுமன்   எடுத்து   வந்த   அந்தச்   சஞ்சீவி மலை என்னுமாறும்; 
புரங்கள்  தாம்    என
-   முப்புரங்கள்   தாமோ என்னுமாறும்;
கந்தருப்பந்  நகர்
  -   கந்தர்வ நகரம்;   விசும்பில் கண்டென
- விண்ணில்    காட்சி   தருகிறது     என்னுமாறும்;   அந்தரத்து  
எழுந்தது
- வானில்  மேலெழுந்தது.
 

(அரோ - அசை) 
 

(58)
 

9762.

எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன் 

பொழிந்தன சர மழை உருவிப் போதலால், 

ஒழிந்ததும் ஒழிகிலது என்ன, ஒல்லெனக் 

கழிந்தது, கவிக் குலம், இராமன் காணவே. 

 

இலங்கை காவலன்- இலங்கையர் கோனான இராவணன்; உயர்
தேர்மிசை எழுந்து
-  உயர்ந்த தேரின் மீது  வான்வழி   எழுந்து;
பொழிந்தன சர மழை -  கொட்டிய அம்பு மழையானது; உருவிப்
போதலால்
- (உடலில்) பட்டு உருவிச் செல்லுதலால்;  ஒழிந்ததும்
ஒழிகிலது   என்ன
-   அழியாததும் அழிந்தது   என்னும்படியாக; 
இராமன்  காணவே
-   இராமன் கண்டு கொண்டிருக்கும் போதே; 
கவிக்குலம்
- வானரக் குலம்; ஒல்லெனக் கழிந்தது - விரைவாக 
இறந்தொழிந்தது.
 

(59)
 

9763.

'முழவு இடு தோளொடு முடியும் பல் தலை 

விழ விடுவேன், இனி; விசும்பு சேமமோ? 

மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்; 

எழ விடு, தேரை' என்று இராமன் கூறினான். 

 

(இதனைக் கண்ட)   இராமன் - இராமபிரான்    (மாதலியிடம்);
'மழவிடை   அனைய- இளங்காளைகள்   போன்ற;நம்படைஞர்
மாண்டனர்
- நம் படைவீரர் இறந்தனர்; முழவு இடு தோளொடு-
மத்தளம் ஒத்த (இராவணன்)   தோள்களோடு; முடியும்- மகுடமும்;
பல்தலை - பலவாகிய   தலைகளும்;   விழ- தரையில் விழுமாறு;
இனி விடுவேன்- இனி என் அம்புகளை ஏவுவேன்; தேரை