எழவிடு- தேரினை வானில் எழுமாறு செய்;விசும்பு சேமமோ? - (அவனுக்கு) வானம் பாதுகாப்பாகுமோ? (இல்லை); என்று கூறினான் - என மொழிந்தான். |
(60) |
| 9764. | 'அந்து செய்குவென்' என அறிந்த மாதலி |
| உந்தினன், தேர் எனும் ஊழிக் காற்றினை; |
| இந்து மண்டிலத்தின்மேல் இரவி மண்டிலம் |
| வந்தென, வந்தது, அம் மானத் தேர்அரோ. |
| |
அறிந்த மாதலி - இராமபிரான் பெருமையை அறிந்துள்ள மாதலி; 'அந்து செய்குவென் - 'யான் அவ்வாறே செய்வேன்'; என- என்று; தேர் எனும் ஊழிக்காற்றினை- தேர் என்னும் பிரளய காலக் காற்றை; உந்தினன் - (மேலே) இயக்கினான்; அம் மானத் தேர்- அந்தப் பெரிய தேரும்; இந்து மண்டிலத்தின் மேல்- சந்திர மண்டலத்தின் மீது; இரவி மண்டிலம் வந்தென - சூரிய மண்டலம் வருவது போல்; வந்தது- (இராவணன் தேர் இருக்கும் இடத்துக்கு) வந்து சேர்ந்தது. |
(அரோ - அசை) அந்து - அப்படி (தெலுங்குச் சொல்) |
(61) |
| 9765. | இரிந்தன மழைக் குலம், இழுகித் திக்கு எலாம்; |
| உரிந்தன உடுக் குலம், உதிர்ந்து சிந்தின; |
| நெரிந்தன நெடு வரைக் குடுமி; நேர் முறை |
| திரிந்தன சாரிகை, தேரும் தேருமே. |
| |
தேரும் தேரும்- இராம இராவணாதியர் தேர்கள் இரண்டும்; சாரிகை நேர்முறை திரிந்தன- (வானில்) நேரான முறைகளில் சாரி திரிந்தன; (அதனால்) மழைக்குலம்- மேகக் கூட்டங்கள்; திக்கு எலாம் - திசைகளில் எல்லாம்; இழுகி - தளர்ந்து; இரிந்தன- கலைந்தன; உடுக்குலம் - விண்மீன் கூட்டங்கள்; உரிந்தன - இடம் பெயர்ந்து; உதிர்ந்து சிந்தின - பொடிப்பொடியாய்ச் சிதைந்தன; நெடுவரைக் குடுமி - உயர்மலைச் சிகரங்கள்; நெரிந்தன - நொறுங்கிப் போயின. |
(62) |
| 9766. | வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு |
| நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும், |