| அலம்வரு குல வரை அனைத்தும், அண்டமும், |
| சலம் வரும், குயவன திகிரித் தன்மைபோல். |
| |
(அத்தேர்கள் இரண்டும்) வலம் வரும் - ஒன்றையொன்று வலமாகச் சுற்றும்; இடம் வரும்- இடமாகச் சுற்றி வரும்; மறுகி- பல முறையும் திரிந்து; வானொடு நிலம் வரும் - வானத்தையும் நிலத்தையும் தொட்டு வரும்; இடம் வலம் நிமிரும்- (மற்றொரு சமயம்) இடப்புறம் வலப்புறமாய் ஓங்கி வரும்; வேலையும் - கடல்களும்; குலவரை அனைத்தும் - மலைக் குலங்களும்; அண்டமும்- இந்த அண்டவெளியும்; குயவன திகிரி தன்மை போல்- சுழலும் இயல்பினதாகிய குயவனது சக்கரத் தன்மை போல; அலம் வரும் - சுழன்று நொந்து; சலம் வரும்- நடுக்கமுறும். |
(63) |
| 9767. | 'எழும் புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர் இது' |
| என்று |
| உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன, |
| தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர், |
| பிழம்பின திரிவன என்னும் பெற்றியார். |
| |
உழுந்து உருள் பொழுதின் - உழுந்து உருளும் அச்சிறு பொழுதுக்குள்; எவ் உலகும் சேர்வன - (அவ்விரு தேரும்) எல்லா உலகையும் சுற்றி வரும் தன்மையன; (ஆதலால்), இது எழும்புகழ் இராமன் தேர்; அரக்கன் தேர்- இதுதான் புகழ் மிக்க இராமனின் தேர்இதுதான் அரக்கனின் தேர்; என்று - என்று; தழும்பிய தேவரும்- பழக்கமுள்ள தேவர்களும்;தெரிவு தந்திலர்- கண்டறிந்து சொல்ல இயலாதவராயினர்; பிழம்பின - ஒளிவடிவங்கள்; திரிவன- சுழல்கின்றன; என்னும் பெற்றியார் - என்று கூறும் தன்மையினராகவே இருந்தனர். |
தழும்புதல் - பழகியிருத்தல் |
(64) |
| 9768. | உக்கிலா உடுக்களும், உருள்கள் தாக்கலின், |
| நெக்கிலா மலைகளும், நெருப்புச் சிந்தலின், |
| வக்கிலாத் திசைகளும், உதிரம் வாய் வழி |
| சுக்கிலா உயிர்களும், இல்லை, காண்பன. |