பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்323

உருள்கள் தாக்கலின் - சக்கரங்கள் தாக்குதலால்; உக்கிலா 
உடுக்களும்
- உதிராத விண்மீன்களும்;   நெருப்புச் சிந்தலின்-
(ஒன்றோடொன்று   உராய்ந்து   தேர்கள்) நெருப்புச் சிதறுதலால்; 
நெக்கிலாமலைகளும்
-  உருகாத மலைகளும்;   வக்கு இலாத் 
திசைகளும்
- பிளந்து போகாத திசைகளும்;  உதிரம் வாய்வழி
இரத்தம்  வாயின்   வழியே;   கக்கிலா உயிர்களும்- கக்காத 
உயிரினங்களும்; காண்பன இல்லை- காணக் கூடாதன ஆயின.
 

வக்கு - பிளக்கை
 

(65)
 

9769.

'இந்திரன் உலகத்தார்' என்பர்; 'ஏன்றவர், 

சந்திரன் உலகத்தார்' என்பர்; 'தாமரை 

அந்தணன் உலகத்தார்' என்பர்; 'அல்லரால், 

மந்தர மலையினார்' என்பர் - வானவர். 

 

வானவர்- தேவர்கள்  (அத்  தேரிலிருந்து   போரிடுவாரை); 
'இந்திரன் உலகத்தார் என்பர் - இந்திர லோகத்தில் உள்ளார் 
என்பார்கள்;  (மற்றொரு சமயம்),     ஏன்றவர்-   போரிடுவார்;
சந்திரன் உலகத்தார் என்பர் - சந்திரமண்டலத்தில்  உள்ளார் 
என்பார்கள்;   (இன்னொரு சமயம்),   'தாமரை    அந்தணன் 
உலகத்தார்  என்பர்
-  தாமரையில்  வசிக்கும்   பிரமதேவன் 
உலகில்   உள்ளார் என்பார்கள்; அல்லரால் - இல்லையில்லை; 
மந்தர  மலையினார்  என்பர் -  மந்தர  மலையில் உள்ளார் 
என்பார்கள்.
 

(66)
 

9770.

'பாற்கடல் நடுவணார்' என்பர்; 'பல் வகை 

மாக் கடலினுக்கும் அவ் வரம்பினார்' என்பர்; 

'மேல் கடலார்' என்பர்; 'கிழக்கு உளார்' என்பர்; 

'ஆர்க்கடை உரும்' என்பர் - அறியும் வானவர். 

 

அறியும் வானவர்-  தொலைவில் நடப்பனவும் அறியவல்லரான
தேவர்கள்   (இராமனும்  இராவணனும் இப்போது);   பாற்  கடல்
நடுவணார் என்பர்
- திருப்பாற்கடலின்  நடுவிலுள்ளார் என்பார்கள்; 
'பல்வகை   மாக்கடலினுக்கும்   அவ்வரம்பினார்'   என்பர்

மேற்குக் கடலில்  இருப்பதாகக் கூறுவர்; 'கிழக்கு உளார்' என்பர் 
- பலவகையான   பெருங்கடலுக்கும்   அப்பாற்பட்ட   எல்லையில்    
உள்ளார்    என்பர்;   மேல்கடலார்   என்பர் - இல்லையில்லை 
கீழைக்கடலில் உள்ளார் என்பர்; 'ஆர்க்கடை