பக்கம் எண் :

324யுத்த காண்டம் 

உரும்' என்பர்- தேர்ச்சக்கரத்தின் ஆரக்கால்களில் இடி
குடி இருக்கிறது என்றும் கூறுவர்.
 

(67)
 

9771.

'மீண்டனவோ?' என்பர்; 'விசும்பு விண்டு உகக் 

கீண்டனவோ?' என்பர்; 'கீழவோ?' என்பர்; 

'பூண்டன புரவியோ? புதிய காற்று!' என்பர்;- 

'மாண்டன உலகம்' என்று, உரைக்கும் வாயினார். 

 

'மீண்டனவோ' என்பர்- (அத்தேர்கள் இரண்டும்) மீண்டும்
பூமிக்கு வந்தனவோ என்பார்கள்;   'விசும்பு   விண்டு உக -
வானம் பிளந்து விழுமாறு; கீண்டனவோ   என்பர்- (இவை)
கிழித்து  விட்டனவோ  என்பார்கள்;   'கீழவோ'   என்பர்-
பாதாளம் புக்கனவோ என்பார்கள்;   'பூண்டன    புரவியோ-
தேரில்  பூட்டியவை   குதிரைகள்   தானா?  (அல்லது); புதிய 
காற்று என்பர்
- புதுமை  வாய்ந்த  காற்றேயாகும் என்பார்கள்;
'உலகம் மாண்டன' என்று- இனி  உலகம் அழிந்தது என்று;
உரைக்கும்   வாயினார்-    (இவ்வாறெல்லாம்)   பேசுகின்ற
வாயினை உடையார்களானார் தேவர்கள்.
 

(68)
  
 

9772.

ஏழுடைக் கடலினும், தீவு ஓர் ஏழினும், 

ஏழுடை மலையினும், உலகு ஒர் ஏழினும் 

சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா, 

ஊழியில் காற்று எனத் திரிந்த, ஓவில. 

 

(அக் குதிரைகள்)ஏழுடைக் கடலினும் - ஏழு கடல்களிலும்;
தீவு ஓர் ஏழினும்- ஏழு தீவுகளிலும்; ஏழுடை மலையினும்
ஏழு மலைகளிலும்; உலகு ஓர் ஏழினும் - ஏழு உலகங்களிலும்; 
சூழுடை அண்டத்தின் சுவர்கள்
- சூழ்ந்திருக்கும் அண்டத்தின்
சுவர்களை; எல்லையா- எல்லையாகக்    கொண்டு;  ஊழியில்
காற்றெனத்    திரிந்த
- பிரளய       காலத்துப்   புயலாய்ச்
சுற்றித் திரிந்தன; ஓவில- ஓய்வற்றவை    ஆயின.
 

(69)
 

இராமன் தடுத்தலன்றிப் போர் செய்யாமை
 

9773.

உடைக் கடல் ஏழினும், உலகம் ஏழினும், 

இடைப் படு தீவினும், மலை ஒர் ஏழினும், 

அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய 

படைக்கலம், மழை படு துளியின் பான்மைய.