பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்325

உடைக்கடம் ஏழினும்- ஆடையாக பூமியைச் சுற்றிய ஏழு
கடல்கள் மீதும்; உலகம் ஏழினும்- ஏழு  உலகங்கள் மீதும்;
இடைப்படு தீவினும் - அவற்றிடையே உள்ள  தீவுகள் மீதும்;
மலை ஓர் ஏழினும்- ஏழு மலைகள் மீதிலும்;  அடைக்கலப்
பொருள்   என
- பாதுகாப்புப்   பொருளாக   (இராவணன்)
வைத்திருந்தவை என்னும்படி; அரக்கன் வீசிய படைக்கலம்-
அரக்கனாகிய அவன் வீசிய ஆயுதங்கள்; மழைபடு துளியின்
பான்மைய
- மழைத்துளிகளென (விழுந்தன). 
 

(70)
 

9774.

ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும், ஓட்டிடை 

இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன 

அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன் 

செறுத்து ஒரு தொழிலிடைச் செய்தது இல்லையால். 

 

இராவணன்   எறிந்த  எய்தன - இராவணன்   வீசியனவும்
ஏவியனவுமான ஆயுதங்கள்;   இறுத்தில- எங்கும்  தங்காதனவாய்;
ஓட்டிடை- ஓடும் இடங்களில் எல்லாம்; உலகு அனைத்தையும்-
அனைத்து   உலகங்களையும்;   ஒறுத்து   உழலும்- அழித்துத்
திரியும்;   ஆரியன் - மேலோனாகிய   இராமன்;   அறுத்ததும்
தடுத்ததும்   அன்றி
  -    அவ்வாயுதங்களை   முறித்ததும் 
தடைசெய்ததும் அல்லாது; செறுத்து- சினமுற்று; ஒருதொழில்-
எச்செயலையும்; இடைச் செய்தது இல்லை - போர் நடுவில்
செய்யவே இல்லை (ஆல் - ஆசை).
 

இராமன் தன் படைக்கலங்களை இராவணன் மீது
எய்யாதிருந்தான். (ஆல் - அசை).
 

(71)
 

9775.

விலங்கலும் வேலையும், மேலும் கீழரும், 

அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும், 

கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக் காலக் காற்று, 

இலங்கையை எய்தின, இமைப்பின் வந்துஅரோ. 

 

விலங்கலும்- மலைகளையும்; வேலையும்- கடல்களையும்;
மேலும் கீழரும் - மேல், கீழ் உலகங்களையும்; அலங்கு ஒளி-
சூரிய ஒளி; திரிதரும் உலகு அனைத்தையும் - பாயும் எல்லா
உலகங்களையும்;  கலங்குறத் திரிந்தது- கலங்கும்படி செய்து
திரிந்த;  ஓர் ஊழிக்காலக்  காற்று-   பிரளய காலப் புயல்;
இமைப்பின் வந்து - நொடிப்போதில் வந்து;  இலங்கையை
எய்தின
- இலங்கையை அடைந்தது. (அரோ - அசை)
 

(72)