சாய்ந்த வல் உருமு போய் - கீழே வீழ்ந்த வன்மை வாய்ந்த இடியேறு சென்று; அரவத் தாழ் கடல் - ஓசை பெற்றுயர் ஆழ்கடலில்; பாய்ந்த வெங்கனல் என- விழுந்த கொடு நெருப்பாக; முழங்கிப் பாய்தலும்- பேரொலியுடன் பாய்ந்ததும்; காய்ந்த - பழுக்கக் காய்ந்த; பேர் இரும்பின் வன் கட்டி - பெரிய வலிய இரும்புக் கட்டியானது; காலுற - பொருந்த; தோய்ந்த நீர் ஆம் என- தோய்க்கப்பட்ட தண்ணீர் போல; ஆழி சுருங்கிற்று - கடல் நீர் வற்றிப் போயிற்று. |
(75) |
இராவணன் இராமன் தேர் புரவி மாதலிமீது அம்பு எய்தல் |
| 9779. | எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப் பரிக் |
| குழுக்களைக் கூர்ங் கணைக் குப்பை ஆக்கி, நேர் |
| வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை |
| அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறுஅரோ. |
| |
(அப்போது இராவணன்) எழுத்து எனச் சிதைவிலா- (சான்றோர் கவி) எழுத்துப் போல் அழிவில்லாததாகிய; இராமன் தேர்- இராமனது தேரின்; பரிக்குழுக்களை - குதிரைகளை; கூர்ங்கணை - கூரிய கணைகளால்; குப்பை ஆக்கி - நிரம்பும் படி செய்து; நேர் - நேராக; வழுத்த அரு மாதலி - வணங்குதற்கு அரிய பெருமைமிக்க மாதலியின்; வயிர மார்பிடை - வைரம் பாய்ந்த (உறுதியான) மார்பின் மீது, ஆறொடு ஆறு- பன்னிரண்டு; கொடுஞ்சரம்- கொடிய அம்புகளை; அழுத்தினன்- பாய்ச்சினான். அரோ- அசை. |
(76) |
இராமன் வருத்தம் |
| 9780. | நீல் நிற நிருதர்கோன் எய்த, நீதியின் |
| சால்புடை மாதலி மார்பில் தைத்தன |
| கோலுனும் இலக்குவன் கோல மார்பின் வீழ் |
| வேலினும் வெம்மையே விளைத்த, வீரற்கு.* |
| |
நீல் நிற நிருதர் கோன் - கருநிறம் கொண்ட அரக்கர் வேந்தன்; எய்த- விடுத்ததும்; இலக்குவன் கோல மார்பின் - இலக்குவனின் அழகிய மார்பில்; வீழ் வேலினும் - பாய்ந்ததுமான வேலைக் காட்டிலும்; நீதியின் சால்புடை- நீதியின் நிறைவுடைய; |