மாதலி மார்பில் தைத்தன- மாதலியின் மார்பில் பட்டனவாகிய; கோல் இனும் - அம்பு இன்னும்; வீரற்கு- இராமனுக்கு; வெம்மையே விளைத்த- வருத்தத்தையே விளைவித்தது. |
(77) |
இராமனை மறைத்த இராவணன் அம்புகள் |
| 9781. | மண்டில வரி சிலை வானவில்லொடும் |
| துண்ட வெண் பிறை எனத் தோன்ற, தூவிய |
| உண்டை வெங் கடுங் கணை ஒருங்கு மூடலால், |
| கண்டிலர் இராமனை, இமைப்பு இல் கண்ணினார். |
| |
இமைப்பு இல் கண்ணினார் - இமையா நாட்டம் பெற்ற தேவர்கள்; மண்டில வரிசிலை- மண்டிலமாக வளைத்துக் கட்டப்பட்ட (இராவணன்) வில்லிலிருந்து; வான வில்லொடு- இந்திர வில்போல அமையுமாறும்; துண்ட வெண்பிறை எனத் தோன்ற - பிளவுபட்ட பிறைக்கீற்றாகத் தோன்றுமாறும் செய்து; தூவிய- ஏவி விடப்பட்ட;உண்டை வெங்கடுங்கணை - தொகுதி தொகுதியான கொடிய கடிய அம்புகள்; ஒருங்கு மூடலால்- முழுமையான (இராமனை) மறைத்தமையால்; இராமனைக் கண்டிலர் - இராமனைக் காண இயலாதவரானார். |
(78) |
| 9782. | 'தோற்றனனே இனி' என்னும் தோற்றத்தால் |
| ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்; |
| வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழரும் |
| காற்று இயக்கு அற்றது; கலங்கிற்று அண்டமே. |
| |
(இராமனைக் காணாத) ஆற்றல் சால் அமரரும் - வலிமை சான்ற தேவர்களும்; 'இனி- இப்பொழுது; தோற்றனனே' - தோல்வியுற்று விட்டானே; என்னும் தோற்றத்தால்- என்னும் பிரமையால்; அச்சம் எய்தினார்- பயம் கொண்டனர்; வேற்றவர்- பகைவர்; ஆர்த்தனர்- (மகிழ்ச்சி) ஆரவாரம் செய்தனர்; மேலும் கீழரும்- மேலுலகிலும் கீழுலகிலும்; காற்று இயக்கு அற்றது- காற்றின் இயக்கமும் இல்லாதாயிற்று; அண்டம் கலங்கிற்று - அண்டம் முழுமையும் துணுக்குற்றது. |
(79) |
| 9783. | அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி |
| பொங்கில திமிர்ந்தன; விசும்பில் போக்கு இல, |