பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்329

வெங் கதிர் தண்கதிர், விலங்கி மீண்டன; 

மங்குலின் நெடும் புனல் மழை வறந்ததால். 

 

அங்கியும்- நெருப்பும்;  தன்ஒளி   அடங்கிற்று - தன்
இயல்பான ஒளி குன்றிற்று; ஆர்கலி- கடலும்;   பொங்கில-
பொங்கி எழவில்லை;   திமிர்ந்தன - அசைவற்றுக் கிடந்தன;
விசும்பில் - வானில்;   வெங்கதிர் தண்கதிர் -  ஞாயிறும்
திங்களும்; போக்குஇல - இயங்கா  தொழிந்தன;  விலங்கி
மீண்டன
- வழி விலகித் திரும்பின; மங்குலின்- மேகங்களின்;
நெடும்  புனல் மழை -   நெடிதாய்ப் பெய்யும் மழை நீர்; 
வறந்தது
- வறண்டு போயிற்று. (ஆல் - அசை)
 

(80)
 

9784.

திசை நிலைக் கட கரி செருக்குச் சிந்தின; 

அசைவு இல வேலைகள், ஆர்க்க அஞ்சின; 

விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன் 

குசன்; நெடு மேருவும் குலுக்கம் உற்றதே. 

 

குசன்- அங்காரகன்;  விசைகொடு - வேகமாய்; விசாகத்தை
நெருக்கி ஏறினன்
- விசாக நட்சத்திரத்தில் நெருக்கிப் புகுந்தான்;
 (என்று), திசை நிலை கடகரி- திசைகளில் நிற்கும் மதம் பொழி
திக்கு யானைகள்  (எட்டும்)   செருக்குச் சிந்தின-  தம் மதச் 
செருக்கு அற்றுப் போயின; வேலைகள்அசைவு இல- கடல்கள் 
இயக்கமற்றன;   ஆர்க்க அஞ்சின- ஒலிக்கப் பயந்தன; நெடு 
மேருவும்
- உயர்ந்த மேரு மலையும்;   குலுக்கம் உற்றது
நடுக்கம் கொண்டது.
 

போர்க்கோளாகிய அங்காரகன் இட்சுவாகு வமிசத்தாரின்
பிறப்பு நட்சத்திரமான விசாகத்தை நெருங்கினன்   என்பது
கெட்ட அறிகுறியாகும்.
 

(81)
 

9785.

வானரத் தலைவனும், இளைய மைந்தனும், 

ஏனை, 'அத் தலைவனைக் காண்கிலேம்' எனக் 

கானகக் கரி எனக் கலங்கினார்; கடல் 

மீன் எனக் கலங்கினார், வீரர் வேறு உளார். 

 

வானரத் தலைவனும்- குரக்கரசனான சுக்கிரீவனும்; இளைய
மைந்தனும்
-   தம்பி   இலக்குவனும்;  ஏனை- பிறரும்; 'அத்
தலைவனைக் காண்கிலேம்' என
- அந்தத் தலைவனாம்