9243. | 'மங்கையை, குலத்துளாளை, தவத்தியை, முனிந்து, | | வாளால் | | சங்கை ஒன்று இன்றிக் கொன்றால், ''குலத்துக்கே | | தக்கான்'' என்று, | | கங்கை அம் சென்னியானும், கண்ணனும், | | கமலத்தோனும், | | செங் கையும் கொட்டி, உன்னைச் சிரிப்பரால், | | ''சிறியன்'' என்னா. | | மங்கையை, குலத்துளாளை, தவத்தியை - ஒரு பெண்ணை, சிறந்த குலத்துள் தோன்றியவளை, தவ ஒழுக்கமுடையவளை; முனிந்து, வாளால் சங்கை ஒன்று இன்றிக் கொன்றால்- முனிந்து வாட்படையினால் ஐயமின்றிக் கொன்றால்; கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும்- கங்கை சூடிய தலையை உடைய சிவனும், திருமாலும், பிரமனும்; 'குலத்துக்கே தக்கான்' என்று- 'அரக்கர் குலத்துக்கே தகுந்தவன் இவன்' என்று; செங்கையும் கொட்டி உன்னை ''சிறியன்'' என்னா சிரிப்பர் - சிவந்த கைகளைக் கொட்டி உன்னைச் ''சிறியன்'' என்று எள்ளிச் சிரிப்பர். | பெண்ணைக் கொல்லுதல் பெரும்பாவம். அதுவும் நற்குலத்தில் தோன்றியவளைக் கொல்லுதல் அதனிலும் பாவம். அதனினும் கற்புக் கடம்பூண்டு நின்ற தவத்தியைக் கொல்லும் பாவம் பெரிது; எனவே தன் மன்னனை இப்பழியினின்று காக்க முயலும் மகோதரன் இராவண ஆணவத்தை அறிந்தவனாதலின், 'குலத்துக்கே தக்கான் என்றும் 'சிறியன்' என்றும் முத்தேவரும் நகைப்பர் எனக் கூறித் தடுக்கின்றான். | (58) | 9244. | 'நிலத்து இயல்பு அன்று; வானின் நெறி அன்று; நீதி | | அன்று; | | தலத்து இயல்பு அன்று; மேலோர் தருமமேல், அதுவும் | | அன்று; | | புலத்தியன் மரபின் வந்து, புண்ணிய விரதம் | | பூண்டாய்! | | வலத்து இயல்பு அன்று; மாயாப் பழி கொள | | மறுகுவாயோ? | | புலத்தியன் மரபில் வந்து புண்ணிய விரதம் பூண்டாய் - புலத்திய முனிவனுடைய மரபில் பிறந்து புண்ணிய விரதங்களை மேற்கொண்டவனே! நிலத்து இயல்பு அன்று; வானின் நெறி |
|
|
|