இராமனைக் காணப் பெற்றிலேம் என்று; கானகக் கரி என- (தலைமையானையைக் காணாத) காட்டு யானைகள் போல; கலங்கினார்- வருந்தினார்கள்; வீரர் வேறு உளார் - பிற வீரர்கள் எல்லாம்; கடல் மீனெனக் கலங்கினார் - (சேதுபந்தன காலத்து) கடல் மீன்கள் போல் நொந்தனர். |
(82) |
இராவணன் தேர்க்கொடியை இராமன் வீழ்த்தல் |
| 9786. | எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக் |
| கொய்தனன் அகற்றி, வெங் கோலின் கோவையால் |
| நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன |
| செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். |
| |
இராகவன்-; எய்தன சரம் எலாம் - (இராவணனால்) எய்யப்பட்ட அம்புகளையெல்லாம்; இமைப்பின் முந்துற - இமைப்பொழுதின் முன்; அகற்றிக் கொய்தனன் - அழித்து ஒழித்தனன்; நொய்தென - (பின்னர்) விரைவாக; அரக்கனை நெருங்க - இராவணனை நெருங்குமாறு சென்று; வெங்கோலின் கோவையால்- கொடிய அம்புத் தொகுதியால்; நொந்தன செய்தனன் - அவன் வருந்தும்படி செய்தான்; அமரர் தேறினார்- தேவர்கள் ஆறுதல் கொண்டனர். |
(83) |
கலிவிருத்தம் (வேறு) |
| 9787. | தூணுடை நிரை புரை கரம் அவைதொறும் அக் |
| கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய, |
| சேணுடை நிகர் கணை சிதறினன் - உணர்வொடு |
| ஊணுடை உயிர்தொறும் உறைவுறும் ஒருவன். |
| |
உணர்வொடு - நல்லுணர்வோடு; ஊணுடை- தன்னை உணவாகக் கொள்ளும்; உயிர் தொறும் உறைவுறும் ஒருவன்- உயிர்களிடம் விரும்பி வசிக்கும் இறைவனாகிய இராமன்; தூணுடை நிரை புரை- தூண்களின் வரிசையை ஒத்த; கரம் அவை தொறும் - பத்துக் கைகளிலும் உள்ள; அ- அந்த; கோணுடை மலை நிகர் - வளைந்த மலைகள் போன்ற; சிலை இடை குறைய- விற்கள் துண்டு படும்படி; சேணுடை- தொலை தூரம் செல்வனாகிய; நிகர் |