பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்331

கணை - தமக்குத் தாமே நிகராகிய அம்புகளை; சிதறினன் 
தூவினான்.
 

'உண்ணும் சோறு'   என்று   எம்பெருமானை நம்மாழ்வார்
உரைத்தாற்போல   இறைவன்  ஞானிகள் அனுபவித்துண்ணும்
அன்னமாகிறான். 'நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு
நிற்கும் பொன்னார்சடைப்   புண்ணியன்' (தேவாரம் 1204:9)
என்ற வரிகள் ஒப்பு நோக்கற்குரியன.
 

நிகர் கணை - ஒளி கொண்ட அம்பு என்பாரும் உளர்.
 

(84)
 

9788.

கயில் விரிவு அற வரு கவசமும் உருவிப்

பயில் விரி குருதிகள் பருகிட, வெயிலொடு 

அயில் விரி சுடு கணை கடவினன் - அறிவின் 

துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன். 

 

துயில்வுழி - யோக நித்திரையின் கண்;   அறிவின்   உணர் 
தரு
- தன்   மூதுணர்   இயல்பால்   அனைத்தையும் உணரவல்ல; 
சுடர் ஒளி ஒருவன்
- பேரொளிப் பிழம்பான  ஒப்பற்ற  இறைவன்; 
(இராமபிரான்), கயில் விரிவு அற வரு- மூட்டுவாய் விரிதலில்லாத; 
கவசமும் உருவி
  -  (இராவணன்)   கவசத்தையும்   ஊடுருவிக் 
கொண்டு; பயில் விரி குருதிகள் பருகிட- (உடலில்) விரவியுள்ள 
இரத்தத்தைப் பருகுமாறு;   வெயிலொடு - ஒளியோடு; அயில் - 
கூர்மையும்; விரி சுடு கணை- பரவிய வெப்பம் மிக்க அம்பினை; 
கடவினன்
- (இராவணன் மீது) ஏவினான்.
 

கயில் - மூட்டுவாய்; அறிவின் துயில் - திருமாலின் அறிதுயில் 
இங்குக் கூறப்பட்டது.
 

(85)
 

9789.

திசை உறு துகிலது, செறி மழை சிதறும் 

விசை உறு முகிழது, விரிதரு சிரனோடு 

இசை உறு கருவியின் இனிது உறு கொடியைத் 

தசை உறு கணைகொடு தரை உற விடலும், 

 

திசை   உறு   -   திக்குகளில்    பொருந்திய;   துகிலது 
ஆடையுடையதும்; செறி மழை சிதறும்- அடை மழை பொழிவதும்; 
விசை உறு முகிழது 
- வேகம் மிக்க அரும்பு போன்ற உறுப்பினை 
உடையதும்; விரிதரு சிரனோடு- விரிந்த தலையுடன் கூடிய; இசை 
உறு கருவியின்
- இசைக் கருவியான வீணையினை;  இனிது உறு 
கொடியை
- அழகுறக் கொண்டிருப்பதுமான