பக்கம் எண் :

332யுத்த காண்டம் 

(இராவணன்)  கொடியை; தசை உறு  கணை கொடு - புலால்
பொருந்திய தன் அம்பினால்; தரை உற விடலும் - (இராமன்)
தரையில் அறுத்து வீழ்த்தியதும்.
 

(86)
 

9790.

படை உக, இமையவர் பருவரல் கெட, வந்து 

இடை உறு திசை திசை இழுகுற, இறைவன் 

அடையுறு கொடிமிசை அணுகினன் - அளவு இல் 

கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். 

 

கடையுக - கடையுகத்தின்;   முடிவு   எழு  -  முடிவில்
பொங்கியெழும்; அளவில் கடல்புரை கலுழன் - மிகப்பெரிய
கடல்  போலும்  பெருந்தோற்றமுள்ள கருடன்;  படை உக -
(இராவணனுடைய) விற்படை  குறைபட்டபோது;   இமையவர் 
பருவரல் கெட
- தேவர் துயர் நீங்கும்படி;  வந்து - பூமிக்கு 
வந்து; இடை உறு - இடம் பொருந்திய; திசை  திசை இழுகுற 
- பல   திசைகளிலும்     (சிறகு)   வீசி;   இறைவன்  
இராமபிரானுடைய; அடையுறு -   (தேரில்)   அமைந்துள்ள; 
கொடிமிசை
- கொடிமீது; அணுகினன் - சார்ந்தனன்.
 

(87)
 

9791.

பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக் 

கண் அகன் உலகினை வலம் வரு கலுழன் 

நண்ணலும், இமையவர், 'நமது உறு கருமம் 

எண்ணலம், முனிவினின் இவறினன்' எனவே. 

 

ஒரு பரவைக் கண்ணகன் உலகினை -   ஒப்பற்ற கடல் 
சூழ்ந்த இடமகன்ற உலகினை; வலம் வரு கலுழன்- வலமாகச் 
சுற்றி  வரும் கருடன்;   பண்ணவன் உயர்   கொடி என
இராமபிரானுடைய  சிறந்த கொடியாகும் என்று;   நண்ணலும்
வந்து பொருந்துதலும்; இமையவர் - தேவர்கள்; 'நமது உறு 
கருமம் எண்ணலம்'
-    இனி நம் செயல்களை மட்டுமே 
கருதமாட்டோம்;   முனிவினன் -   சினம் மிக்க கருடன்; 
இவறினன்
- (பெருமான் தேர் மீது) ஏறினன்; என- என்று  
கூறுதலும்.
 

பரவை - காரணப் பெயர், பரந்திருப்பது.
  

(88)
 

9792.

ஆயது ஓர் அமைதியின், அறிவினின் அறிவான் 

நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான்,