| ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத் |
| தீவினை தரு படை - தெறு தொழில் மறவோன். |
| |
ஆயது ஓர் அமைதியின் - அப்படிப்பட்ட சூழலில்; தெறுதொழில் மறவோன் - அழிவுச் செயல் வல்ல கொடியவனாகிய இராவணன்; அறிவினின் அறிவான்நாயகன் ஒருவனை - உணரத்தக்கது உணரும் தலைவனான ஒப்பற்ற இராமனை; நலிகிலது உணர்வான்- (தன் அம்புகள்) துன்பம் செய்யாதென அறிந்தவனாகி; இருள் உறு - இருட்டை விளைவிக்கின்ற; தாமதம் எனும் - தாமதாத்திரம் எனப்பெயர் பெற்ற; அத்தீவினை தருபடை- கெடுதலைச் செய்யும் கணையை; ஏயினன் - ஏவினான். |
தமஸ் - இருள், இருள் உறு (படை) - தாமதாத்திரம் |
(89) |
| 9793. | தீ முகம் உடையன சில; முகம் உதிரம் |
| தோய் முகம் உடையன; சுரர் முகம் உடைய; |
| பேய் முகம் உடையன; பிலமுகம் நுழையும் |
| வாய்முகம் வரி அரவு அனையன வருவ. |
| |
(மேற்குறித்த தாமதாத்திரத்திலிருந்து புறப்பட்ட அம்புகளில்) சில தீமுகம் உடையன- சில நெருப்புமிழ் முகம் படைத்திருந்தன (சில); முகம் உதிரம் தோய் முகம் உடையன- சில அம்புகள் குருதி தோய்ந்த முகம் கொண்டிருந்தன; சுரர் முகம் உடைய - (சில) தேவர் முகம் படைத்திருந்தன; பேய் முகம் உடையன- (சில) பேய்களின் முகத்தோடு இருந்தன; பில முகம் - குகைக்குள்; நுழையும் - செல்கின்ற; வாய்முகம் - வாயும் முகமும் கொண்டன (சில); வரி அரவு அனையன வருவ- கோடுகளுடன் கூடிய பாம்புகளைப் போல் வந்தன. |
(90) |
| 9794. | ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும், |
| இரு திசை எயிறு உற வருவன; பெரிய; |
| கருதிய கருதிய புரிவன; கனலும் |
| பருதியை மதியொடு பருகுவ - பகழி. |
| |
(மேலும்) பகழி - இந்த அம்புகள்; ஒரு திசை முதல்- ஒரு திக்கின் தொடக்க முதலாக; கடை ஒரு திசை அளவும்- (அதற்கு) மறுதலையான) ஒரு திக்கின் முடிவு வரையிலும்; இருதிசை - இரு திசைகளிலும்; எயிறு உற- பற்களைக் காட்டிக் கொண்டு; வருவன- |