அன்று - பெண்ணைக் கொலை செய்தல் என்பது மண்ணுலக இயல்பன்று வானுலகத்தோர் நெறி அன்று; நீதி அன்று; தலத்து இயல்பு அன்று- நீதிக்குரியதும் அல்ல எவ்விடத்துக்கும் இயல்பல்ல; மேலோர் தருமமேல், அதுவும் அன்று- பெரியோர்கள் பின்பற்றிய தரும நெறியோ எனில் (இத்தருமத்தால் இதைச் செய்யலாம் என அனுமதிக்கப் பட்டதோ எனின்) அதுவும் அன்று; வலத்து, இயல்பு அன்று - இது செய்தல்) வலிமையின் பாற்பட்டதுமன்று; மாயாப் பழிகொள மறுகுவாயோ? - (அப்பெண்ணைக் கொலை செய்து) என்றும் அழியாத பழயை ஏற்று (பின்பு எண்ணி) மனங்கலங்குவாயோ? |
புலத்தியன் - பிரம தேவனின் மகன். அம்முனிவனின் மகன் விச்சிரவசு. அவன் மகன் இராவணன். மறுகுதல் - கலங்குதல். இராவணன் புண்ணிய விரதம் மேற்கொண்டதனை மாரீசன் கூற்றால் (கம்ப. 3245) அறியலாம். |
(59) |
9245. | 'இன்று நீ இவளை வாளால் எறிந்துபோய் |
| இராமன்தன்னை |
| வென்று மீண்டு, இலங்கை மூதூர் எய்தினை |
| வெதும்புவாயோ? |
| பொன்றினள் சீதை; இன்றே, புரவல! |
| புதல்வன்தன்னைக் |
| கொன்றவர்தம்மைக் கொல்லக் கூசினை போலும்!' |
| என்றான். |
|
நீ இன்று இவளை வாளால் எறிந்துபோய்- நீ இன்றைக்கு இச்சீதையை வாளால் வெட்டிவிட்டுச் சென்று; இராமன் தன்னை வென்று இலங்கை மூதூர் மீண்டு எய்தினை - இராமனை வென்று இலங்கையாகிய பழமை வாய்ந்த (நம்) நகரத்துக்குத் திரும்பி வந்து; இன்றே பொன்றினள் சீதை வெதும்புவாயோ - இன்றே (நீ கொல்வாயானால்) இறந்துபடும் சீதைக்காக (பிறகு நினைந்து) மனம் வெதும்புவாயோ? புரவல! புதல்வன் தன்னைக் கொன்றவர் தம்மை - அரசே! (நின்) மகனைக் கொன்றவர் தம்மை; கொல்லக் கூசினை போலும் என்றான் - கொல்லுவதற்குப் பின்வாங்கினை போலும்' என்றான். |
'சீதையைக் கொன்ற பின்பு சென்று இராமனை வென்று மீள்வதால் என்பயன்' என்கிறான் மகோதரன். அத்துடன் பெண்ணைக் |