பக்கம் எண் :

38யுத்த காண்டம் 

9249.

மண் உற நடந்த தானை வளர்ந்த மாத் தூளி மண்ட, 

விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக, மேல்  

மேல்,

கண்ணுற அருமை காணாக் கற்பத்தின் முடிவில்

கார்போல்,

எண்ணுற அரிய சேனை எய்தியது, இலங்கை நோக்கி. 

 

மண்  உற  நடந்த   தானை   வளர்ந்த மாத்தூளி மண்ட-
பூமியில் பொருந்த நடந்த சேனையால் பெருகிய துகள் மிகுந்து எழுந்து
நெருங்குதலால்;   விண்ணுற  நடக்கின்றாரும்  மிதித்தனர் ஏக -
விண்ணிற்  பொருந்த நடக்கின்ற தேவர்களும்  (மண்ணில்  நடப்பது
போல) அத்துகளின்  செறிவை  மிதித்து  நடக்க; கற்பத்தின் முடிவில்
கார் போல் எண்ணுற அரிய சேனை
-  யுக முடிவில் எழும் மேகம்
போன்று, கணக்கிட முடியாத அந்த அரக்கர் சேனை; கண்ணுற
அருமை காணா
- (தூளிப் பரப்பினால்) பார்த்தற்கு அருமையாகக்
காணப்பட்டு; இலங்கை நோக்கி மேல் மேல் எய்தியது- இலங்கா
புரியை நோக்கி மேலும் மேலும் சென்றடைந்தது.
 

தூளிமண்ட விண்ணுற நடக்கின்றாரும் (ஒப்பு)    ''கதிகொண்ட
சேனை நடவெழுதுகள் ககனம் சுலாவி யனிலகதியுற முதிர் சண்ட சூர
கிரணமிருளெழ முகில் பஞ்ச பூதவடிவு பெறவிய, னதிவண்டலாக
வமரகுறை தருநகரம் பொன்வீதி புழுதியெழ' (வில்லி. பா. 16, 78) 
 

(3)
 

9250.

வாள்தனின் வயங்க மின்னா; மழை அதின் 

இருளமாட்டா;

ஈட்டிய முரசின் ஆர்ப்பை, இடிப்பொடு முழக்கமாட்டா; 

மீட்டு இனி உவமை இல்லை, வேலை மீச் சென்ற 

என்னின்-

தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல. 

 

வாள்தனின் வயங்கமின்னா மழை அதின் இருள மாட்டா-
அரக்க சேனை ஏந்திய வாட்களைப்  போல  மின்ன மாட்டாதனவான
மேகங்கள் அப்படைஞரைப் போல (கடுமையால்) இருண்டிருக்கமாட்டா; 
ஈட்டிய   முரசின் ஆர்ப்பை   இடிப்பொடு   முழக்கமாட்டா
(மேலும் அப்படை) நெருக்கமாக அடித்துச் செல்லுகின்ற முரசங்களின் 
ஆரவாரத்தை ஒப்ப அம் மேகங்கள் இடியொடு முழங்கமாட்டா;
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும்- இங்ஙனமாக ஒளி
மிகுமாறு தீட்டப் பெற்ற