பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்39

ஆயுதங்களையும், குதிரைகள் யானைகள் மற்றும் தேர்களுமாக;
வேலை மீச்சென்ற என்னின் -   அச்சேனை  (நிலத்தில்
நடத்தற்கு இடமின்மையால்)  கடலின்  மீது  எழுந்து நடந்து
சென்றது என்றால்; செல்ல மீட்டு இனி உவமை இல்லை -
(அங்ஙனம்) செல்லுகின்ற சேனைக்கு (மேகத்தைத் தவிர) வேறு
இனி உவமை கூற ஏதுமில்லை. 
 

(4)
 

9251.

உலகினுக்கு உலகு போய்ப் போய், ஒன்றின் ஒன்று 

ஒதுங்கலுற்ற,

தொலைவு அருந் தானை மேன்மேல் எழுந்தது 

தொடர்ந்து சுற்ற;

நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின, நிமிர்ந்து;  

நின்றான்,

அலரியும், முந்து செல்லும் ஆறு நீத்து, அஞ்சி,  

அப்பால்.

 

தொலைவு அருந்தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து 
சுற்ற
- அழிவு இல்லாத சேனை மேலும் மேலும் எழுந்து தொடர்ந்து 
வந்து சூழ்ந்து நிற்க; உலகினுக்கு உலகு போய்ப் போய் ஒன்றின்
ஒன்று  ஒதுங்கலுற்ற
-   உலகத்திற்கு   உலகம்  ஒதுங்கி சென்று
ஓருலகத்தில்   மற்றோருலகம்   மறைந்து   ஒதுங்கத்   தொடங்கின;
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின- நிலவுக்குத் தலைவனாகிய 
சந்திரனும் விண்மீன்களும் (அஞ்சி அப்பால்) நீங்கின; அலரியும், 
முந்து செல்லும் ஆறு நீத்து
- சூரியனும் முன் செல்லுகின்ற வழியை 
விடுத்து; அஞ்சி அப்பால் நிமிர்ந்து நின்றான்- அச்சமுற்று அப்பால் 
உயர்ந்து நின்றான். 
 

(5)
 

9252.

மேற்பட விசும்பை முட்டி, மேருவின் விளங்கி, விண்ட 

நாற் பெரு வாயிலூடும், இலங்கை ஊர், நடக்கும் 

தானை,-

கார்க் கருங் கடலை, மற்றோர் இடத்திடை, 

காலன்தானே

சேர்ப்பது போன்றது, யாண்டும் சுமை பொறாது 

உலகம் என்ன.

 

மேற்பட விசும்பை முட்டி மேருவின் விளங்கி- மேலிடம்
பொருந்த ஆகாயத்தை முட்டி மேருவைப் போல ஒளிர்ந்து; விண்ட