ஓர் கருணை தன்னால்- இரக்கமுற்றால் செல்லும் (இராமபிரானின் இயல்பான) கருணையினால்; தலை மகன் அருள - இராமபிரான் அருளிச் செய்ய; வீழ்ந்த மலையின் மேல் மலை வீழ்ந்தென்ன- விழுந்து கிடந்த மலையின் மேல் (நின்ற) மலையொன்று விழுந்தது போல; தள்ளி- (துயரம்) தள்ளியதனால்; அவன்மேல் வீழ்ந்தனன்- இராவணன் (உடல்) மேல் வீழ்ந்தான் (வீடணன்). |
களவியல் அரக்கன் பின்னே தோன்றி கடன்மை தீர்ந்தது. (கம்ப. 6506) நான் உன் தம்பி. இவனுக்கு நான் எப்படிக் கடன் செய்வது என்பது வீடணனின் தயக்கத்திற்குக் காரணம் ஆகலாம். இங்கு வீடணா! இறுதிக் கடனை நீ செய்கிறாயா? இல்லை, நான் செய்யட்டுமா? என்று பெருமான் கேட்டான் என்று நம்பிள்ளை ஈடு கூறுவது நினைவுக்கு வருகிறது. நீ என் தம்பி. இவன் உன் அண்ணன்; ஆகவே, இவன் எனக்கும் உறவினன் ஆவான்.என்று இராவணனுக்கு இராமபிரான் இறுதிக் கடன் செய்ய எழுந்தபோது, உடனே வீடணன் நீர்க்கடன் செய்ய எழுந்தான் என்று நம்பிள்ளை ஈட்டுரை கூறுவது ஒப்பு நோக்கற்பாலது. |
(216) |
9920. | ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் எரியின் |
| நெஞ்சின் |
| தேவரும் முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் சேர, |
| தா அரும் பொறையினான்தன் அறிவினால் தகைக்க |
| நின்ற |
| ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகு வாய் ஆர. |
|
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் - இடையறாது (பெருகி வரும்) உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும்; இரங்கி ஏங்க - இரக்கமுற்று ஏங்கவும்; தேவரும் முனிவர் தாமும் சிந்தையின் இரக்கம் சேர - தேவரும் முனிவர் (கூடத்) தத்தமது நெஞ்சில் இரக்கம் கொள்ளவும்; ஆ அரும் பொறையினான் தன் அறிவினைத் தகைக்க நின்ற - தனது பற்றற்ற உணர்வினைத் தடுக்குமாறு நின்ற; ஆவலும் துயரும் தீர - ஆசையும் துன்பமும் தீருமாறு; பகுவாய் ஆர அரற்றினான் - பிளந்த வாயாரப் புலம்பத் தொடங்கினான். |
வாய் விட்டு அரற்றி அழுதால் ஆசையும் துயரும் குறையும் என்று இன்றைய உளநூல் அறிஞரும் கூறுவதற்கேற்ப, ''ஆவலும் துயரும் தீர வாயார அரற்றினான்'' என்றார். |
(217) |