பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்399

வீடணன் புலம்பல்
 

அறுசீர் ஆசிரியவிருத்தம் (வேறு)
 

9921.

உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு; 

சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக் 

கண்ணாலே நோக்கவே, போக்கியதே 

உயிர்; நீயும் களப் பட்டாயே! 

எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித் தான் 

எண்ணுதியோ? - எண் இல் ஆற்றல் 

அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம்

பிரளயமே! அமரர் கூற்றே! 

 

எண் இல் ஆற்றல் அண்ணாவோ! அண்ணாவோ! 
அளவற்ற   ஆற்றல்களின் உறைவிடமாயிருந்த என் 
அண்ணனே!  என் அண்ணனே! அசுரர்கள் தம் பிரளயமே 
- அசுரர்கட்கு எல்லாம் ஊழிக்காலமாய் உருவெடுத்தவனே!; 
அமரர்  கூற்றே!- தேவர்கட்கு எல்லாம் எமனாய் 
இருந்தவனே!; ஒரு நஞ்சும் - எந்த விடமும்; உண்ணாதே 
உயிர் உண்ணாது
- உண்ணாமல் ஓர் உயிரை உண்ணாது; 
சனகி எனும் பெரு நஞ்சு
- (இதற்கு மாறாக) சானகி 
என்னும் கொடிய விடம்; கண்ணாலே நோக்கவே- (நீ)
கண்ணாலே  கண்ட மாத்திரத்தில்; உன்னை உயிர் 
போக்கியதே
- உன் உயிரைப் போக்கியதே;  நீயும் 
களப்பட்டாயே
- (ஒப்புயர்வற்ற பெருவீரனாகிய)  நீயும் 
(சாமானியன் போன்று) படுகளப் பட்டு வீழ்ந்து கிடந்தனையே; 
எண்ணாதேன் எண்ணிய சொல் - எண்ணத் தெரியாதவன் 
என்று  (உன்னால் கருதப்பட்ட) நான் எண்ணி உரைத்த 
சொற்களை;இன்று இனித்தான் எண்ணுதியோ?- இந்த 
இறுதிக் காலத்தில் இப்போது தான் எண்ணுகின்றாயா?
 

''திட்டியின் விடமன்ன கற்பின் செல்வி'' (கம்ப. 7351)
என்பது காண்க. ''அசுரர்களின் பிரளயமே!'' மகாகவிகட்கே
வாய்க்கும் சொல்லாட்சி.
 

(218)
 

9922.

''ஓர் ஆசை ஒருவன்மேல் உயிர் ஆசைக்

குலமகள்மேல் உடைய காதல் 

தீர்; ஆசை பழி'' என்றேன்; எனை முனிந்த 

முனிவு ஆறித் தேறினாயோ?