நாற்பெரு வாயிலூடும்- திறந்த நான்கு பெரிய வாயில் வழியாக; இலங்கை ஊர் நடக்கும் தானை- இலங்கை மாநகரை நோக்கி நடக்கின்ற அச்சேனையானது; காலன்தானே கார்க் கருங்கடலை - யமனே கரிய நிறம் வாய்ந்த பெரிய கடலை; உலகம் யாண்டும் சுமை பொறாது என்ன - உலகம் எவ்விடத்தும் சுமை தாங்காது என்ற காரணத்தால்; மற்றோர் இடத்திடை சேர்ப்பது போன்றது - பிறிதோர் இடத்தில் சேர்ப்பதைப் போன்றிருந்தது. |
(6) |
9253. | 'நெருக்குடை வாயிலூடு புகும் எனின், நெடிது காலம் |
| இருக்கும் அத்தனையே' என்னா, மதிலினுக்கு உம்பர் |
| எய்தி, |
| அரக்கனது இலங்கை உற்ற - அண்டங்கள் |
| அனைத்தின் உள்ள |
| கருக் கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது |
| என்ன. |
|
நெருக்குடை வாயிலூடு புகும் எனின் - நெருக்கத்தை உடைய வாயிலின் வழியாக உள்ளே நுழைவோம் என்றால்; நெடிது காலம் இருக்கும் அத்தனையோ என்னா - 'நெடிதுகாலம் காத்துக் கொண்டிருக்கும் அவ்வளவே; (உள்ளே புகல் அரிது)' என்று கருதி மதிலினுக்கு உம்பர் எய்தி- மதிலுக்கு மேல் ஏறிச் சென்று; அண்டங்கள் அனைத்தின் உள்ள- எல்லா அண்டங்களிலுமுள்ள; கருக்கிளர் மேகம் எல்லாம் - கருக்கொண்ட மேகங்கள் எல்லாம்; ஒருங்குடன் கலந்தது என்ன அரக்கனது இலங்கை உற்ற - ஒருசேர உடன் கலந்தது என்னுமாறு வந்த சேனைகள் அரக்கனாகிய இராவணனுடைய இலங்கை நகரை அடைந்தன. |
(7) |
இராவணன் சேனைகளை நோக்குதல் |
9254. | அதுபொழுது, அரக்கர்கோனும், அணிகொள் |
| கோபுரத்தின் எய்தி, |
| பொதுவுற நோக்கலுற்றான், ஒரு நெறி போகப் போக, |
| விதி முறை காண்பென் என்னும் வேட்கையான், |
| வேலை ஏழும் |
| கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின்காதல் |
| கொண்டான். |