| போர் ஆசைப்பட்டு எழுந்தகுலம் முற்றும் |
| பொன்றவும்தான் பொங்கி நின்ற |
| பேர் ஆசை பெயர்ந்ததோ? - பெயர்ந்து ஆசைக் |
| கரி இரியப் புருவம் பேர்த்தாய்! |
|
ஆசைக்கரி பெயர்ந்து இரியப் புருவம் பேர்த்தாய் - திசை யானைகள் நிலை பெயருமாறு புருவம் பெயர்க்கும் திறல் வாய்ந்தவனே; ஓராதே - உணராமல்; ஒருவன் தன் உயிர் ஆசைக் குலமகள் மேல்- வேறு ஒருவன் தன் உயிர் போன்று நேசித்து வந்த ஒரு குல மகளின் மேல்; உற்ற காதல்- கொண்ட ஆசை; தீராத வசை என்றேன் - (என்றும்) தீராப் பழியைத் தரும் என்று கூறினேன்; எனை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?- (அப்போது) நீ என் மேற் கொண்ட கோபம் (தவறு என்று) (இப்போதாவது) தணிந்து தெளிவடைந்தாயா?; போர் ஆசைப்பட்டு எழுந்த - போரிலே ஆசை கொண்டு எழுந்த; குலம் முற்றும் பொன்றவும்- குலம் முழுவதும் அழிந்து படவும்; பொங்கி நின்ற பேர் ஆசை பெயர்ந்ததோ?- மேன்மேல் உயர்ந்து வந்த உன் பேராசை (இப்போதாவது) ஒழிந்ததா? |
(219) |
9923. | ''அன்றுஎரியில் விழு வேதவதி இவள்காண்; |
| உலகுக்கு ஓர் அன்னை'' என்று, |
| குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்; |
| அது மனத்துள் கொள்ளாதே போய், |
| உன்தனது குலம் அடங்க, உருத்து அமரில் |
| படக் கண்டும், உறவு ஆகாதே, |
| பொன்றினையே! இராகவன்தன் புய வலியை |
| இன்று அறிந்து, போயினாயோ!''* |
|
அன்று- ஒரு காலத்தில்; எரியில் விழு வேதவதி- தீயில் (உன்னைச் சபித்து) விழுந்த வேதவதி என்பவள்; உலகுக்கு ஓர் அன்னை - உலகத்துக்கெல்லாம் ஒப்பற்ற தாயாகி (சீதையென்னும்); இவள் காண்- இவளாகி வந்துள்ளாள்; என்று - என்று; குன்று அனைய நெடுந்தோளாய்- மலை போன்ற திண்மையுடைய பெருந்தோளனே!; கூறினேன்- நான் சொன்னேன்; அது மனத்துள் கொள்ளாதே போய் - அவ்வுரையை மனத்துட் கொள்ளாமல் போய்; உன் தனது குலம் அடங்க- உன்னுடைய குலம் முழுவதும் அழிய; அமரில் உருத்து- போரில் சினந்து; படக் கண்டும் - இறந்து |