மடிதலைக் கண்டும்; உறவு ஆகாதே - (நீ இராமபிரானை) உறவாகக் கொள்ளாமல்; பொன்றினையே- இறுதி வரையில் அவனைப் பகையாகக் கொண்டு அழிந்து ஒழிந்தாயே; இராகவனார் புய வலியை- இராமபிரானுடைய தோள்வலியை (நான் சொல்லும்போது அறியாமல்); இன்று அறிந்து போயினாயோ- (சாகும்போது) அறிந்துகொண்டு போயிருக்கிறாயோ! |
இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள ஒன்பது வகை (நவவித சம்பந்தம்) உறவுகளில், பிதா புத்திர உறவும் ஒன்று. உறவாகக் கருத வேண்டிய தலைவனைப் பகையாக மயக்க உணர்வால். பிறழ உணர்ந்து, இராவணன் போன்றோர் அழிகின்றனர் என்பதனை ''உறவாகாமல் பொன்றினையே'' என்பதனால் பெறவைத்தார். |
(220) |
9924. | 'மன்றல் மா மலரானும், வடி மழு வாள் |
| படையானும், வரங்கள் ஈந்த |
| ஒன்று அலாதன உடைய முடியோடும் |
| பொடி ஆகி உதிர்ந்து போன; |
| அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் |
| அவன் நாட்டை அணுகாநின்ற |
| இன்றுதான் உணர்ந்தனையே, இராமன்தன் |
| யாவருக்கும் இறைவன் ஆதல்? |
|
மன்றல் மா மலரோனும்- மணமுள்ள தாமரை மேல் வாழ்பவனாகிய பிரமதேவனும்; வடி மழுவாள் படையானும் - கூரிய மழுவாளைப் படையாகக் கொண்ட சிவபிரானும்; ஈந்த - கொடுத்தருளிய; வரங்கள் - வரங்கள்; ஒன்று அலாதன உடைய - பத்தாகவுள்ள; முடியோடு- உன் தலைகளோடு சேர்ந்து; பொடியாகி உதிர்ந்து போன- பொடிப் பொடியாக உதிர்ந்து போயின; அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் - (நீ சீதையை எடுத்து வந்து) அன்று இராமனின் ஆற்றலை உணராது போனாலும்; அவன் நாட்டை அணுகா நின்ற இன்றுதான்- அந்த பரமபதத்தை அடையா நின்ற இன்றைக்கு ஆகிலும்; இராமன் தான் யாவர்க்கும் இறைவன் ஆதல் - இராமனே அனைவர்க்கும் இறைவன் ஆவான் என்பதனை; உணர்ந்தனையே- உணர்ந்தாயோ? |
(221) |
9925. | 'வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம் |
| யாவருக்கும் மேலாம் முன்பன் |