| பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும் |
| பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ? |
| ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே, |
| கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க, |
| மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? |
| குளிர்ந்தானோ, மதியம் என்பான்? |
|
வீரநாடு உற்றாயோ?- வீரர்கள் அடையும் துறக்க நாட்டை அடைந்தாயோ?; விரிஞ்சன் ஆம் யாவருக்கும் மேலாம் முன்பன் பேரன் நாடு உற்றாயோ?- விரிஞ்சன் எனும் பெயரினனாய் (உயிர்களில்) எவர்க்கும் மேன்மையும் முதன்மையும் உடையவனான நான்முகன் ஆகிய உன் பாட்டனின் நாட்டினை அடைந்தாயோ?; பிறைசூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ - பிறை நிலவைச் சிரத்தில் சூடும் சிவபெருமானின் கயிலாய புரத்தையடைந்தாயோ?; அணா- அண்ணா!; உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் ஆர்?- உனது உயிரை அஞ்சாமற் கொண்டு சென்றவர் தான் யார்?; அது எலாம் நிற்க- அது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; மாரனார் தனியாட்டம் தவிர்ந்தாரோ?- மன்மதனார் (உன்பால் ஆடிய) வலிய ஆட்டத்தை (இப்போதாவது) நிறுத்திக்கொண்டாரோ; மதியம் என்பான் குளிர்ந்தானோ?- (காம தாபத்தால் உன்னை எரித்துக் கொண்டிருந்த) சந்திரன் (இப்போதாவது) குளிர்ச்சி தருபவன் ஆனானோ? |
வீரநாடு - வீர சொர்க்கம். |
(222) |
9926. | ''கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்'' என்று |
| அது குறித்துக் கொடுமை சூழ்ந்து, |
| பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி |
| நெடும் பாரப் பழி தீர்ந்தாளே! |
| நல்லாரும் தீயாரும் நரகத்தார் |
| துறக்கத்தார், நம்பி! நம்மோடு |
| எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே |
| விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! |
|
கொல்லாத மைத்துனனை - கொல்லத் தகாத மைத்துனனை; கொன்றாய் என்று- நீ கொன்று விட்டாய் என்று; அது குறித்துக் கொடுமை சூழ்ந்து- அக்கொடுமையை மனத்துட் கொண்டு |