தேவியை; தழுவுவான்- தழுவும் ஆசையினால்;உயிர் கொடுத்து - உயிரைக் கொடுத்து; பழி கொண்ட- பழியை வாங்கிய; பித்தா- பித்தனே!; திசையானை பணை இறுத்த- திக்கு யானைகளின் கொம்புகளை ஒடித்த; பணைத்த மார்பால்- பெரிய மார்பினால்; பின்னை- பிறகு;பார்மகளைத் தழுவினையே- மண் மகளை அணைத்துக் கிடக்கின்றாயே! |
திருமகளைத் தழுவ விரும்புவது கண்டு பிற தெய்வ மகளிரை அணைத்த பொறாமை மிக்கது என்க. பொறாமை கூர - பொறுக்க மாட்டாமை மிக எனினுமாம். பார் மகளைக் தழுவல் மண்ணைத் தழுவிக் கிடத்தல். போரிலும் கல்வியிலும், புகழிலும், மேம்பட்டு, இவற்றிற்குத் தெய்வங்களான அதி தேவதைகளை அணைத்து வாழ்ந்தாய். இவற்றோடு அமையாமல் திருமகளாகிய பிறர் மனையை அணைக்க நினைத்து, மண்ணை அணைத்து மாண்டனையே என்றழுதான் வீடணன். சோகச்சுவையைப் பிழிந்து வைத்திருக்கிற பாடல்களுள் இதுவும் ஒன்றாதல் காண்க. உயிர் கொடுத்தாகிலும் புகழை விரும்பிப் பெற வேண்டியதிருக்க உயிர் கொடுத்துப் பழி கொண்டதனால் ''பித்தா'' என்று அழுதான். |
(224) |
வீடணன் தேறுதல் |
9928. | என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து, |
| சாம்பவனாம் எண்கின் வேந்தன், |
| 'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை |
| மதியாத கொள்கைத்து ஆகிச் |
| சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது |
| வருந்துதியோ?' என்ன, தேறி |
| நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டாள் |
| மயன் பயந்த நெடுங் கண் பாவை. |
|
என்று ஏங்கி- என்று இரங்கி; அரற்றுவான் தனை - கதறுகின்ற வீடணனை; எடுத்து- (கைகளால்) எடுத்து; சாம்பவனாம் எண்கின் வேந்தன்- சாம்பவன் என்கின்ற கரடிகளின் அரசன்; குன்று ஓங்கு நெடுந்தோளாய்!- மலை போல் உயர்ந்த பெருந் தோளனே!; விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி- விதியின் நிலைமையைக் கருதாத கொள்கையைதாய்; சென்று ஓங்கும் - சென்று உயர்கின்ற; உணர்வினையோ?- உணர்வினையுடையவனாய் ஆயினையோ?; தேறாதே அழுந்துதியோ?- |