தெளியாமல் (துன்பத்தில்) ஆழ்கின்றாயோ?; என்ன- என்று கூற; தேறி- தெளிவுற்றவனாய்; அப்புறத்து நின்றான்- அப்புறமாக நின்றான்; (வீடணன்) மயன் பயந்த நெடுங்கண் பாவை- மயனின் மகளாகிய பெரிய கண்களையுடைய மண்டோதரி; அரக்கன் நிலை கேட்டாள் - இராவணன் (பட்ட) நிலையைக் கேள்வியுற்றாள். |
(225) |
மண்டோதரியும் அரக்கியரும் இராவணன் கிடக்கும் இடம் அடைதல் |
கலிவிருத்தம் |
9929. | அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார், |
| புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார், |
| இனம் தொடர்ந்து உடன் வர, எய்தினாள் என்ப - |
| நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். |
|
அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்- பல இலட்சக் கணக்கினரான இராட்சதப் பெண்கள்; புனைந்த பூங்குழல் விரித்து- மலர் சூடிய கூந்தல்களை விரித்து; அரற்றும் பூசலார்- கதறுகின்ற அழுகையினராய்; இனம் தொடர்ந்து- கும்பலாகத் தொடர்ந்து; உடன் வர- கூட வர; நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் - நினைவும் மறப்பும் அற்ற நெஞ்சினளாகிய மண்டோதரி; எய்தினாள் - அடைந்தாள். |
தன்னுடைய கணவனை மறந்து விடுவது, பின் நினைவது என்னும் நிலையின்றி, எப்போதும் கணவனை நெஞ்சுட் கொண்டிருப்பவள் ஆதலால், ''நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினள்'' என்றார். ஒப்பு. ''உன்னினேன் என்றேன், மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள்'' (குறள் 1316) |
(226) |
9930. | இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன் உயிர் |
| புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர் |
| பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால் - |
| அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே. |
|
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு - தயையும் தருமமும் துணையாகக் கொண்டு; இன்னுயிர் புரக்கும் நன் குலத்து ஒருவன் - இனிய உயிர்களைப் பாதுகாக்கப் பிறந்த நல்ல குலத்துப் பிறந்த |