ஒருவனை;பூண்டதோர் பரக்கழி யான் என- (அவ்வாறு செய்யாமல்) மேற்கொண்டதொரு மிகு பழி பரந்து விரிவது போல; அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதை- அரக்கிமார்கள் வாயைத் திறந்து கதறுகின்ற ஓசையானது; பரந்து நீண்டது- பரவி விரிந்தது. |
உயர் குலத்துப் பிறந்தான் ஒருவன் செய்த பழிச் செயல் ''மதிக்கண் மறுப்போல்'' உலகமெங்கும் பரந்து தெரியும். அதுபோல்அரக்கியர் அழும் ஓசை உலகெங்கும் இராவணன் இறப்பு தெரியுமாறு பரவியது என்பதாம். |
(227) |
9931. | நூபுரம் புலம்பிட, சிலம்பு நொந்து அழ, |
| கோபுரம்தொறும் புறம் குறுகினார் சிலர்; |
| 'ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம்' எனா, |
| மா புரம் தவிர, விண் வழிச் சென்றார் சிலர். |
|
நூபுரம் புலம்பிட- நூபுரம் வருந்தவும்; சிலம்பு நொந்து அழ - சிலம்பு புலம்பிடவும்; கோபுரம் தொறும் புறம் சிலர் குறுகினர்- (நகரவாயில்) கோபுரந்தோறும் சிலர் வெளியே வந்தனர்; ஆபுரந்தரன் பகை அற்றது ஆம் எனா - ஓ! இந்திரன் பகை இன்றோடு ஒழிந்தது என்று கூறி; மாபுரம் தவிர விண் வழிச் சென்றார் சிலர்- இலங்கையிலிருந்து (இராவணனின் தேவர் குல மகளிர்) சிலர் வானுலகுக்குச் சென்றனர். |
இந்திரனோடு இருந்த பகை இன்றோடு ஒழிந்தது ஆதலால், இனி நம் உலகு செல்வோம் என்று இராவணனால் கவர்ந்து வரப்பட்ட தேவ மாதர் சிலர் வான்வழியே தேவஉலகம் சென்றனர் என்பதாம். |
(228) |
9932. | அழைப்பு ஒலி முழக்கு எழ, அழகு மின்னிட, |
| குழைப் பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட, |
| உழைப் பொலி உண் கண் நீர்த் தாரை மீது உக, |
| மழைப் பெருங் குலம் என, வான் வந்தார் சிலர். |
|
அழைப்பு ஒலி முழக்கு எழ- அழைக்கின்ற ஒலி (இடி) முழக்கைப் போல் எழவும்; அழகு மின்னிட- அழகு மின்னல் போன்று மின்னிடவும்; குழை பொலி நல் அணிக்குலங்கள் வில்லிட- காதணி முதலிய அழகிய நல்ல அணிவகைகள் (வான) வில்போன்று ஒளிரவும்; உழைபொலி- மான்போல் திகழும்; உண்கண் - மைதீட்டப் பெற்ற கண்களிலிருந்து; நீர்த்தாரை மீது உக- கண்ணீர்த் தாரைகள் (மண்) மேலே விழவும்; மழைப் பெரும் |