அதுபொழுது அரக்கர் கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்தி- அப்பொழுது அரக்கர் தலைவனாகிய இராவணனும் அழகு மிக்க கோபுரத்தின் மேலே ஏறி; பொதுவுற நோக்கலுற்றான்- அச்சேனையைப் பொதுவகையால் நோக்கத் தொடங்கினவன்; வேலை ஏழும் கதுமென ஒருங்கு நோக்கும்- ஏழு கடல்களையும் விரைவாக ஒருங்கு காண (ஆவல் கொண்ட); பேதையின் காதல் கொண்டான் - அறிவிலி போல ஆசை கொண்டவனாய்; ஒரு நெறி போகப் போக விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் - தன் பார்வையை ஒரு நெறியே செல்லுமாறு செலுத்தி விதிமுறைப்படி தனித்தனியே காண்பேன் என்னும் விருப்பத்தை உடையவனானான். |
மிகப்பெரிய அச்சேனையை இராவணன் விரும்பியவாறு தனித்தனியே காணவியலாது என்பதனைக் கூறவந்த கவிஞர், ''வேலை ஏழும் கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான்'' என உவமை கூறினார். |
(8) |
9255. | மாதிரம் ஒன்றின்நின்று, மாறு ஒரு திசைமேல் மண்டி, |
| ஓத நீர் செல்வது அன்ன தானையை, உணர்வு |
| கூட்டி, |
| வேத வேதாந்தம் கூறும் பொருளினை |
| விரிக்கின்றார்போல், |
| தூதுவர் அணிகள்தோறும் வரன்முறை காட்டிச் |
| சென்றார்; |
|
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை மேல்- ஒரு திசையில் நின்று மற்றொரு திசைமேல்; ஓதநீர் மண்டிச் செல்வது அன்ன தானையை - கடல்நீர் விரைந்து செல்வது போன்று இலங்கை நோக்கிச் செல்லுகின்ற சேனையை; தூதுவர் உணர்வு கூட்டி- தூதுவர்கள் (கேட்கின்றவனாகிய) இராவணனுடைய அறிவு கூடும்படி; வேதவேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார் போல்- வேதங்களும் வேதாந்தங்களும் கூறும் பரம் பொருளின் இயல்பினை விரித்துக் கூறுவோர் போல,; அணிகள் தோறும் வரன் முறை காட்டிச் சென்றார் - அணிகள் தோறும் உள்ளவர்களை வரன் முறையாக விளக்கிக் காட்டிச் சென்றார்கள். |
பரம் பொருள் வேத வேதாந்தங்களாலும் எட்ட முடியாதது. அங்ஙனமாய பொருளை ஒருவாறு தர்க்கரீதியாக விளக்கிச் |