பக்கம் எண் :

410யுத்த காண்டம் 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

9939.

'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு

அடுத்தவாறு! அரக்கர் வேந்தன் 

பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த 

கருத்து அதுவும் பிடித்திலேனோ? 

முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? 

படித் தலைய முகங்கள்தானோ? 

என்னேயோ, என்னேயோ, இராவணனார் 

முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 

 

அன்னேயோ!  அன்னேயோ! -   அம்ம!'   அம்மம்ம!; 
கொடியேற்கு   அடுத்தவாறு -   கொடியவளான எனக்கு 
வந்துள்ள நிலைமையை என்னென்பது; அரக்கர் வேந்தன் 
பின்னேயோ   இறப்பது
-   இராக்கதர் தலைவனாகிய 
இராவணன்   இறந்த   பின்னேயோ நான் இறப்பது? முன் 
பிடித்திருந்த கருத்து
- முன்பு தொடங்கி நான் கடைப்பிடித்து 
வந்த கொள்கைகளில்; அதுவும் பிடித்திலேனோ?
அதையும் கைவிட்டு   விட்டேனோ?;   முன்னேயோ 
விழுந்ததுவும் முடித்தலையோ?
- (அந்தத் தவற்றால்) எனக்கு 
முன்னாலே (என் கணவரின்) மகுடத் தலைகள் விழுந்தனவோ? 
படித்தலைய முகங்கள் தானோ?
- மண் மேல் கிடப்பவை என் 
(உயிர் அனையானின்) தலைகள் தானோ? என்னேயோ? 
என்னேயோ?
 - என்னென்பேன் என்னென்பேன்?; இராவணனார் 
முடிந்த பரிசு இதுவோ பாவம்
- (உலகைக் கலக்கிய) 
இராவணனார் வாழ்வு இத்தகையதாகவா முடியவேண்டும்! பாவம்! 
பாவம்!
 

தானோ - தாமோ. ஒருமை பன்மை மயக்கம்.   மனமொத்த 
கணவன் மனைவியர் ஒரு சேர உயிர் துறக்கவேண்டும். அல்லது
கணவனுக்குமுன் மனைவி உயிர் துறக்க எண்ணுவது இந்நாட்டு 
மரபு, மூவுலகங்களையும் கலக்கி வென்றவனும் மண்ணின் மேல் 
தலை யற்று வீழ்ந்து மாள்வது தான் விதியோ! என்பாள்.
''இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம்!'' என்றாள்.
 

(236)
 

9940.

'வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த

திரு மேனி, மேலும் கீழும் 

எள் இருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும் 

இடன் நாடி, இழைத்தவாறோ?