| ''கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை |
| மனச் சிறையில் கரந்த காதல் |
| உள் இருக்கும்'' எனக் கருதி, உடல் புகுந்து, |
| தடவியதோ ஒருவன் வாளி? |
|
ஒருவன் வாளி - ஒப்பற்ற இராமபிரானின் அம்பு; வெள் எருக்கம் சடைமுடியான்- வெள்ளை எருக்கம் பூவை (முடியில்) சூடும் சிவபெருமானுடைய; வெற்பு எடுத்த திருமேனி - கயிலை மலையைத் தூக்கிய இராவணனுடைய அழகிய உடலின்; மேலும் கீழும் - உடம்பின் மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும்; எள் இருக்கும் இடம் இன்றி - எள் இருக்கும் இடம் கூட இல்லாமல்; உயிர் இருக்கும் இடம் நாடி- உயிர் இருக்கும் இடம் முழுவதையும் தேடி; இழைத்த ஆறோ?- ஆராய்ந்த வண்ணமோ? கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை- தேன் குடிகொள்ளும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய சீதாதேவியை; மனச் சிறையில் கரந்த காதல் - மனம் எனும் சிறையில் ஒளித்து வைத்திருந்த காதலானது;உள் இருக்கும் எனக் கருதி - உள்ளே (இன்னும் எங்காவது) பதுங்கியிருக்கும் என்று எண்ணி; உடல் புகுந்து தடவியதோ? - உடல் முழுதும் நுழைந்து (நுழைந்து) தடவிப் பார்த்ததோ? |
இறப்பின் பின் நிகழும் புலம்பலில் எள்ளைச் சுட்டிய நயம் காண்க. |
(237) |
9941. | 'ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் |
| எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால் |
| தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த |
| சரங்களே; போரில் தோற்று |
| வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து, |
| வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்! |
| ஓர்அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? |
| மானுடவன் ஊற்றம் ஈதோ! |
|
ஒருவன் சிலை துரந்த சரங்கள் - ஒப்பற்றவனான இராம பிரானுடைய வில் செலுத்திய அம்புகள்; ஆரம் போர் திருமார்பை - முத்து மாலைகள் அணிந்த அழகிய மார்பினை; அகல் முழைகள் என - விரிந்த குகைகள் போல; திறந்து- பிளந்து;இவ் உலகுக்கு அப்பால்- இந்த உலகைக் கடந்து அப்பால்; தூரம் போயின - வெகு |