பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்413

இந்திரன் முதலிய தேவர்கள் வேண்டலால், இராமாவதாரம்
நிகழ்ந்ததும்,  அங்கு   தயரதன்     கட்டளை நிறைவேற்றம்
காரணமாக இராமன்   வனவாசம்    நேர்ந்ததும்,    அங்கு
சூர்ப்பணகையின் காம வெறியால், அவளுக்குப் அங்கபங்கம்
நிகழ்ந்ததும், அவள் தூண்டலால் இராவணன் சீதா தேவியின்
மேற்கொண்ட    தகாக் காதலும், அது காரணமாக இராவண
வதமும், காரண காரியத் தொடர்ச்சியாக நிகழ்ந்துள்ளமையால்
''கடைமுறையே     புரந்தரனார் பெருந்தவமாய்ப் போயிற்று''
என்றாள்.
 

(239)
 

9943.

''தேவர்க்கும், திசைக் கரிக்கும், சிவனார்க்கும்

அயனார்க்கும், செங் கண் மாற்கும்,

ஏவர்க்கும், வலியானுக்கு என்று உண்டாம்

இறுதி?'' என ஏமாப்புற்றேன்;

ஆவற்கண் நீ உழந்த அருந் தவத்தின்

பெருங் கடற்கும், வரம் என்று ஆன்ற

காவற்கும், வலியான் ஓர் மானுடவன்

உளன் என்னக் கருதினேனோ?

 

தேவர்க்கும் - வானவர்க்கும்; திசைக்கரிக்கும்   - திசை
யானைகட்கும்;         சிவனார்க்கும்     அயனார்க்கும்,
செங்கண்மாற்கும்
- மும்மூர்த்திகட்கும்,;      ஏவர்க்கும்-
மற்றும் உள்ள யாவரைக்     காட்டிலும்;    வலியானுக்கு -
வலியவனான உனக்கு; என்று இறுதி உண்டாம்? - என்றைக்கு
முடிவு வரப்போகிறது?;என்று ஏமாப்பு உற்றேன் - பெருமிதம்
உற்றிருந்தேன்; நீ ஆவல்கண் - நீ ஆர்வத்தோடு;    உழன்ற-
வருந்திச் செய்த; அரும் தவத்தின் பெரும் கடற்கும்- அரிய
பெரிய கடல் போன்ற தவத்திற்கும்; வரம்  என்று     ஆன்ற
காவற்கும்
- வரம் என்று       சொல்லப்பெற்ற   காவலாகிய
பேற்றுக்கும்; ஓர் வலியான் ஓர் மானுடவன்     - (அழிவை
விளைக்கவல்ல ஒப்பற்ற வலிமையையுடைய மானிடன்;    உளன்
என்னக்   கருதினேனோ?
-     இருக்கின்றான்    என நான்
நினைக்கவில்லையே!
 

மும்மூர்த்திகள் மூவரும் இராவணனுக்குத்       தோற்றமை
இராவணன் மந்திரப் படலம் (கம்ப. 6182-86)     பாடல்களாலும்,
உத்தர காண்டத்திற்கு விசயம் படலப் பாடல்களிலும் உணர்க.
 

(240)
 

9944.

'அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி

ஆயுவும் முன் அறிஞர்க்கேயும்