| உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், |
| தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை; |
| திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் |
| பாற்கடலைச் சீதை என்னும் |
| பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, |
| தவப் பயனின் பெருமை பார்ப்பேன்? |
|
அரை கடையிட்டு - அரையைக் கடைசியாகக் கொண்டு; அமைவுற்ற முக்கோடி ஆயுவும் - மூன்று கோடி ஆயுளுக்கும்; பேர் அறிஞர்க்கேயும்- பெருமை பெற்ற அறிஞர்களாலும்;உரை கடையிட்டு அளப்பு அரிய - வாய் வார்த்கைகளால் முடிவு காட்டி அளக்க முடியாத; பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு- பெருவலிமை கொண்ட (உன்) தோள் ஆற்றலுக்கு;உலப்பு இல்லை - அழிவு இல்லை (என்று நினைத்து); தவப் பயனின் பெருமை பார்ப்பேன் - தவங்களின் பயனாய் வந்த வரங்களின் பெருக்கத்தை எண்ணிப் பெருமை கொண்டிருந்தவளாகிய நான்; திரை கடையிட்டு அளப்பு அரிய - அலைகளின் முடிவு காட்டி அளக்க முடியாத; வரம் என்னும் பாற்கடலை - (உன்) வரங்கள் ஆகிய பாற்கடலை; சீதை என்னும் பிரை - சீதா தேவியாகிய பிரையானது; கடையிட்டு- இறுதியில் இடப்பட்டு; அழிப்பதனை - அழிக்கப்போவதனை; அறிந்தேனோ- அறிந்தேன் இல்லையே! |
அரை கடையிட்டு அமைவுற்ற முக்கோடி அரையைக் கடைசியில் கொண்ட மூன்று என்னும் கோடி இராவணன் கடைசியில் வாழ்ந்தது அரைக் கோடி 9899ஆம் பாடல் உரை பார்க்க. ஆயு - ஆயுள் கடைக் குறைந்தது. இராவணன் பெற்ற வரம் பாற்கடல் போல் விரிந்திருந்தும் சீதையென்னும் சிறு பிரைத் துளியால் பாற்கடல் முழுதும் அழிந்து கெட்டது என்று உருவகித்தார். முற்றுருவகம். |
(241) |
9945. | 'ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? |
| அவை ஏழும் ஏழும் அஞ்சும் |
| வீரனார் உடல் துறந்து, விண் புக்கார்; |
| கண் புக்க வேழ வில்லால், |
| நார நாள் மலர்க் கணையால், நாள் எல்லாம் |
| தோள் எல்லாம், நைய எய்யும் |
| மாரனார் தனி இலக்கை மனித்தனார் |
| அழித்தனரே, வரத்தினாலே! |