பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்415

உலகு இயற்கை அறிதக்கார்   அன்னார் யார்- உலகின்
இயல்பினை (முழுதும்) அறியத்    தகுதியுடையவர்  யார் ? (யாரும்
இல்லை); அவை- அந்த உலகம்; ஏழும்   ஏழும்- பதினான்கும்;
அஞ்சும் வீரனார் - அஞ்சத்தக்க இராவணனாரும்; உடல் துறந்து
விண் புக்கார்
- உடலைப்    போட்டு விண்உலகம் போய்விட்டார்;
கண்    புக்க   வேழவில்லால்- கணுக்கள் பொருந்திய கரும்பு
வில்லால்;நாரம் நாள் மலர்க்கணை - (வண்டொழுக்கை)  நாணாகக்
கொண்ட அன்றலர்ந்த மலர்களின் கணையால்; நாள் எல்லாம் தோள்
எல்லாம்
- நாள் முழுவதும் தோள்கள் எல்லாம்; நைய - வருந்துமாறு;
எய்யும் - எய்கின்ற; மாரனார் தனியிலக்கை- மன்மதனின் தனிப்பட்ட
குறியை (இராவணனை);மனித்தனார் - மனிதராகிய     இராமபிரான்;
வரத்தினால் அழித்தனரே - அவர் வரத்தின் மேன்மையினால்
அழித்து விட்டாரே!
 

இதுநாள் வரை உடலோடு பதினான்கு உலகமும் சென்று அச்சமூட்டி
வெற்றியோடு   திரும்பி வந்த  இராவணன், இன்று உடலோடு செல்ல
முடியாமல், தன்  உடலைப்  போட்டு  விட்டு  விண்ணுலகு  செல்ல
நேர்ந்ததே!  இந்த உலகின் இயல்பை  யாரால்  உள்ளபடி  அறிய
இயலும்  என்பது   மண்டோதரியின்   வியப்பு.   கணுவையுடைய
கரும்புவில்லும்,  மலர்க்கணையும்  ஒரு  மலையனைய  மாவீரனின்
தோள்களை நைய  வைத்து விட்டனவே என்று காமத்தின் வலிமை
செப்பியவாறு. காமன் விட்ட கணைகட்கு இலக்கானதன்றி இராவணன்
மார்பு, மற்று  யார் கணைக்கும்  இலக்காக  இருந்ததில்லையாதலால்,
''மாரனார்   தனியிலக்கை''  என்றாள்.  தேவர்   பெற்ற  வரத்தின்
மேன்மையினால் மனிதர் இராவணன் அழித்துவிட்டனர் என்றவாறு.
 

(242)
 

மண்டோதரி உயிர் பிரிதல்
 

கலிவிருத்தம்
 

9946.

என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்

பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்

தன் தழைக் கைகளால் தழுவி, தனி

நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள்.

 

என்று அழைத்தனள் - என்று கூவி அழுதவளாய்; ஏங்கி -
ஏக்கமுற்று; எழுந்து- எழுந்து; அவன் - அந்த இராவணனின்;
பொன் தழைத்த- பொன் அணிகள்    தழைத்துக் கிடக்கிற;
பொரு அருமார்பினை- ஒப்புரைக்க இயலாத (வீர) மார்பினை;
தன்