தழைக்கைகளால் தழுவி - தன் தளிர் போன்ற (மெல்லிய) கரங்களால் தழுவி; தனி நின்று- தனித்து நின்று; அழைத்து உயிர்த்தான் - அழைத்தவாறு பெருமூச்சு விட்டவளாய்; உயிர் நீங்கினாள்- உயிர் நீத்தாள். |
இப்பிறவியில் உன்னை அணைப்பது இதுவே இறுதியென்று, பொன் தழைத்த அவன் திருமார்பினைப் புல்லி, இனி அது இல்லை எனும் எண்ணம் வந்தவுடன், நெஞ்சு துடிப்பு நின்று விட்டதாகலின், ''தழுவி உயிர்த்து உயிர் நீங்கினாள்'' என்றார். பெருமூச்சுவிட்டாள். (உயிர்) மூச்சுவிட்டாள். மாசு மறுவற்ற மண்டோதரியின் தூய கற்புப் பெருக்கினை எண்ணி வியந்த நம் முன்னோர்கள், மண்டோதரியை தூய பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியாய்ச் சேர்த்துள்ளனர் என்பதை இங்கு நினைக. |
(243) |
9947. | வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத் |
| தான மங்கையரும், தவப் பாலவர், |
| ஆன மங்கையரும், அருங் கற்புடை |
| மான மங்கையர் தாமும், வழுத்தினார். |
|
வான மங்கையர்- வானாட்டு மகளிரும்; விஞ்சையர் - வித்தியாதரப் பெண்டிரும்; மற்றும் அத்தான மங்கையரும்- மற்றும் அத்தானவ மங்கையரும்; தவப் பாலவர் ஆன- தவத்தின் பக்கத்திலே சென்ற; மங்கையரும்- முனிபத்தினியரும்;அருங் கற்புடை மான மங்கையர்தாமும்- அரிய கற்புடைய மானுட மகளிரும்; வழுத்தினார் - (கற்பரசியாகிய) (மண்டோதரியை) பாராட்டித் துதித்தனர். |
(244) |
9948. | பின்னர், வீடணன் பேர் எழில் தம்முனை, |
| வன்னி கூவி, வரன்முறையால், மறை |
| சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து, |
| இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான். |
|
பின்னர்- (இதற்குப்) பின்பு; வீடணன் - வீடணன்; வரன் முறையால் - மரபு வழிப்படி;வன்னி கூவி- அக்கினியை ஆவாகனம் செய்து; மறை சொன்ன- வேதம் விதித்துள்ள; ஈம விதிமுறையால் - ஈமக்கடன் விதிகளின் படி; தொகுத்து- (சடங்குப் பொருள்களாகக்) கூட்டி; இன்னல் நெஞ்சினொடு- துயரம் மிக்க உள்ளத்தோடு; பேர் எழில் தம்முனை - பேரழகினனாகிய தம் முன் |