பிறந்த அண்ணனாகிய இராவணனை; இந்தனத்து ஏற்றினான் - ஈம விறகின்மேல் ஏற்றி வைத்தான். |
(245) |
9949. | கடன்கள் செய்து முடித்து, கணவனோடு |
| உடைந்து போன மயன் மகளோடு உடன் |
| அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் - |
| குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். |
|
குடம் கொள் நீரினும்- குடம் கொண்ட நீரை விட மிகுதியாக; கண் சோர் குமிழியான் - குமிழியிட்டுக் கண்ணீரைக் கொட்டும் வீடணன்; கடன்கள் செய்து முடித்து- இறுதிக் கடன்களையெல்லாம் செய்து முடித்தபின்; கணவனோடு உடைந்து போன - கணவனுடனே (தன்) நெஞ்சம் உடைந்து மாண்டு போன; மயன் மகளோடு உடன் - மயனின் மகளாகிய மண்டோதரியுடன்; அடங்க- (அந்த இராவணன் உடல்) அடங்குமாறு; வெங்கனலுக்கு - கொடுந்தீக்கு; அவியாக்கினான் - உணவாக்கினான். |
உயிரோடு கட்டையேறுதல் தவிர்த்து, தன் கற்பால் உயிர் பிரித்து, உடன் கட்டையேறினாள் மண்டோதரி. இதனைத் ''தலைக்கற்பு'' என்பர் சான்றோர். நெருப்புக்கு இரையாக்கினான் என்னாமல் அவியாக்கினான் என்று குறித்த நயம் உணர்க. கற்பொழுக்கம் பேணிய மண்டோதரியும் அவள் கணவனும் வானோர்க்கு நல்விருந்து என்பார் ''அவி'' என்றார். |
(246)
|
9950. | மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து, |
| உற்ற தீக் கொடுத்து, உண்குறு நீர் உகுத்து, |
| 'எற்றையோர்க்கும் இவன் அலது இல்' எனா, |
| வெற்றி வீரன் குரை கழல் மேவினான். |
|
மற்றையோர்க்கும்- போரில உயிர் நீத்த மற்றைய வீரர்கட்கும்; வரன் முறையால் வகுத்து- (நூல்கள்) கூறிவரும் முறைப்படி வகைசெய்து; உற்ற தீக் கொடுத்து- உரிய தீக் கொடுத்து; உண்குறு நீர் உகுத்து- உண்ணுமாறு நீர்க் கடன்களையும் புரிந்து; எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா- எவர்க்கும் இவன் அல்லால் (வேறு துணை) இல்லை என்று கூறத்தக்க; வெற்றி வீரன்- வெற்றியே தாங்கும் வீரனான் இராமபிரானுடைய; குரைகழல்- ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை;மேவினான்- அடைந்தான் (வீடணன்). |