செல்லுவாரும், அதனைக் கேட்பாரும் எங்ஙனம் அப்பொருளை முற்றிலும் உணராமல் இருக்கின்றார்களோ அங்ஙனமே விளக்க முடியாத பெரும் எண்ணிக்கையான படைகளைத்தாமே முழுவதும் உணராதவராய தூதுவர் ஒருவாறு விளக்கிக் கூறக் கேட்டான் இராவணன். |
(9) |
கலித்துறை |
9256. | 'சாகத் தீவினின் உறைபவர், தானவர் சமைத்த |
| யாகத்தில் பிறந்து இயைந்தவர், தேவரை எல்லாம் |
| மோகத்தின் பட முடித்தவர், மாயையின் முதல்வர், |
| மேகத்தைத் தொடும் மெய்யினர், இவர்' என |
| விரித்தார். |
|
சாகத் தீவினின் உறைபவர்- இவர் சாகத் தீவில் வாழ்பவர்; தானவர் சமைத்த யாகத்தில் பிறந்து இயைந்தவர் - அரக்கர்களை செய்த வேள்வியில் தோன்றி அமைந்தவர்; தேவரை எல்லாம் மோகத்தின் படமுடித்தவர் - தேவர்களை எல்லாம் மோகத்தில் விழுமாறு மாயை செய்து முடித்தவர்; மாயையின் முதல்வர் - மாயை செய்வதில் முதன்மை பெற்றவர்; மேகத்தைத் தொடும் மெய்யினர்- (வானில் இயங்கும்) மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள உடம்பினை உடையவர்; 'இவர்' என விரித்தார் - இவர்கள் என ஓரணியைக் காட்டி விரித்துக் கூறினர் தூதர்கள். |
சாகம் - தேக்கு. அம்மரங்கள் மிகுந்திருந்தமையால் அத்தீவு சாகத்தீவு எனப்பட்டது என்பர். இதனைத் தேக்கத் தீவு எனவும் கூறுவர். இது ஏழுதீவுகளுள் ஒன்றெனவும் கூறுவர். ஏனையவை நாவலந்தீவு. இறலித்தீவு, இலவந்தீவு,கிரவுஞ்சத்தீவு, குசைத்தீவு, புட்கரத் தீவு என்பனவாம். |
(10) |
9257. | 'குசையின் தீவினின் உறைபவர், கூற்றுக்கும் |
| விதிக்கும் |
| வசையும் வன்மையும் வளர்ப்பவர், வான நாட்டு |
| உறைவார் |
| இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது, இங்கு, |
| இவரால்; |
| விசையம்தாம் என நிற்பவர், இவர் - நெடு விறலோய்! |