பக்கம் எண் :

 மீட்சிப் படலம்421

நீ- இலக்குவனே நீ; சோதியான் மகன்- சூரியன் மகனாகிய
சுக்கிரீவன்; வாயுவின் தோன்றல்- காற்றுக் கடவுளின் மகனாகிய
அனுமன்; மற்று ஏது இல்  வானர  வீரரொடு ஏகி- மற்றுள்ள
குற்றம் இல்லாத குரங்கு வீரர்கள்   ஆகியோருடன்   புறப்பட்டுச்
சென்று; நீதியானை- அற நீதியிற் சிறிதும் வழுவாத வீடணனுக்கு;
ஆதி நாயகன்   ஆக்கிய   நூல் முறை-   முதற்கடவுளாகிய
நாராயணன்  தந்த  வேத  விதிப்படி;  நெடுமுடி   சூட்டுவாய்-
சிறந்த கிரீடத்தைச் சூட்டுவாய்;
 

ஏது - குற்றம்.  நீதியான் - வீடணன்  என்பது  முன்னும்
கூறப்பட்டது. (கம்ப. 7625)  பதினான்கு  வருடம்  வனவாசம்
செய்வதாக மேற்கொண்ட விரதத்தால் இராமன் இலங்கை நகருட்
புகாது   இலக்குவனைச்   சென்று   முடிசூட்டச்  செய்தான்.
கிட்கிந்தையில்   சுக்கிரீவனுக்கு   இலக்குவனைக்   கொண்டு
முடிசூட்டியதை இங்கு (கம்ப. 4116) நினைக. நீதியானை - உருபு
மயக்கம்; நான்காவதன்கண் இரண்டாவது வந்தது. 
 

(2)
 

9954.

என்று கூறி, இளவலொடு ஆரையும் 

வென்றி வீரன் விடை அருள் வேலையில், 

நின்ற தேவர் நெடுந் திரையோரொடும் 

சென்று, தம் தம் செய்கை புரிந்தனர்.* 

 

வென்றி வீரன் - இராமன்; என்று கூறி - இவ்வாறு சொல்லி;
இளவலொடு ஆரையும்- இலக்குவனோடு மற்றுள்ளவர்களுக்கும்;
விடை அருள் வேலையில் - விடை கொடுத்த பொழுது; நின்ற
தேவர்
-   (அது கேட்டு)   அருகிருந்த   தேவர்கள்;   நெடுந்
திசையோரொடும்
- எண்திசைக் காவலர்களுடனும்; தம் தம்
செய்கை   புரிந்தனர்
-  சென்று   தங்கள்  தங்களால்
(பட்டாபிஷேகத்துக்கு) முடிந்த உதவிகளைச் செய்வாராயினர்.
 

எண் திசைக் காவலர்: இந்திரன், அக்கினி, இயமன்,
நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈகானன் என்போர். நின்ற
தேவர் இவர் ஒழியப் பிறராகக் கொள்க. ஆரையும் உருபு
மயக்கம். நான்காவதன்கண் இரண்டாவது வந்தது. ஆர்க்கும்
விடை கொடுத்து என இயையும். 
 

(3)
 

9955.

சூழ் கடல் புனலும், பல தோயமும், 

நீள் முடித் தொகையும், பிற நீர்மையும், 

பாழி துற்று அரி பற்றிய பீடமும்,