விண்ணுளோர் - விண்ணுலக வாசிகளான தேவர்கள்; மெய்கொள் வேத விதிமுறை- சத்தியத்தைத் தன்னிடத்தே கொண்டுள்ள வேதத்திற் கூறிய சடங்கு முறைகளின்படி; தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட- தெய்வத் தன்மையுள்ள புண்ணிய தீர்த்தங்களினால் அபிஷேகம் செய்தலைச் செவ்வையாகச் செய்ய; ஐயன் ஆணையினால் - இராமனது கட்டளையின் வண்ணம்; இளங்கோளரி- இளைய சிங்கத்தை ஒத்த இலக்குவன்; கையினால்- தன் திருக்கரத்தால்; மகுடன் கவித்தான்- கிரீடத்தை வீடணன் தலைமேற் சூடினான். |
தத்துவ விளக்கம் தருதலின் வேதம் மெய்கொள் வேதம் எனப்பட்டது. அரோ. அசை. |
(6) |
9958. | கரிய குன்று கதிரினைச் சூடி ஓர் |
| எரி மணித் தவிசில் பொலிந்தென்னவே, |
| விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு |
| அரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ. |
|
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் - நிறைந்த வெற்றியை உடைய வீடணன்; கரிய குன்று கதிரினைச் சூடி ஓர் எரிமணித் தவிசில் பொலிந்து என்ன- கருநிறம் உள்ள ஒரு மலை சூரியனைத் தலைமேல் அணிந்து கொண்டு ஒப்பற்ற பிரகாசிக்கிற மணிக் கற்களால் ஆகிய பீடத்தில் விளங்கினாற் போல என்று சொல்லும்படி; தமர் ஆர்த்து எழ- உறவினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய; அரியணைப் பொலிந்தான் - சிம்மாசனத்தில் அழகுற வீற்றிருந்தான். |
கரிய குன்று - வீடணன், கதிர் - முடி, எரிமணித் தலிசு - சிம்மாசனம் எனக் கொள்க. ஏ, அசை. |
(7) |
9959. | தேவர் பூ மழை, சித்தர் முதலினோர் |
| மேவு காதல் விரை மலர், வேறு இலா |
| மூவரோடு, முனிவர், மற்று யாவரும் |
| நாவில் ஆசி நறை மலர், தூவினார்.* |
|
தேவர் - தேவர்கள்; பூ மழை- மலர் மழையையும்; சித்தர் முதலினோர் - சித்தர் முதலானோர்கள்; மேவு காதல் விரை மலர் - மிகுந்த அன்போடு கூடிய மணமிக்க மலர்களையும்; வேறு இலா மூவரோடு முனிவர் மற்று யாவரும் - தம்முள் ஏற்றத்தாழ்வில்லாத |