மும்மூர்த்திகளும் முனிவர்களும் மற்றுள்ள அனைவரும்; நாவில் ஆசி நறை மலர் - தமது நாவால் கூறுகின்ற ஆசீர்வாதமாகிய மணமிக்க மலர்களையும்; தூவினார் - வீடணன் மேல் சொரிந்தார்கள். |
சித்தர் - பதினென்கணத்துத் தேவசாதியில் ஒருவர். சித்தர், வித்தியாதரர், கின்னரர், கிம்புருடர், யக்ஷர், கந்தர்வர், கருடர், சாரணர் என்பவர்களைக் குறிக்கும். ஆசிச் சொற்களை மலர் என்று உபசரித்தார். |
(8) |
9960. | முடி புனைந்த நிருதர் முதலவன் |
| அடி வணங்கி இளவலை, ஆண்டை அந் |
| நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து, |
| இடி கொள் சொல்லன் அனலற்கு இது |
| இயம்பினான்:* |
|
முடி புனைந்த- கிரீடத்தை அணிந்து கொண்ட (பட்டாபிஷேகம் செய்து கொண்ட); நிருதர் முதலவன் - அரக்கர் குலத் தலைவனாகிய வீடணன்; இளவலை அடி வணங்கி - இலக்குவனைக் காலில் வீழ்ந்து வணங்கி; அந்நெடிய காதலினோர்க்கு- அந்த பேரன்பையுடைய இலக்குவனுக்கு; ஆண்டை- அவ்விடத்தே; உயர் நீர்மை செய்து- உயர்ந்த உபசாரங்களை எல்லாம் செய்து; இடிகொள் சொல்லன் - இடிமுழக்கம் போலக் கம்பீரமான குரலை உடையவனாய்; அனலற்கு- தன் அமைச்சர்களில் மூத்தவனாகிய அனலன் என்பானுக்கு; இது இயம்பினான்- பின்வரும் வார்த்தைகளைச் சொல்லலானான். |
அனலன், அனிலன், அரன், சம்பாதி என்னும் நால்வர் வீடணன் அமைச்சர்கள். (கம்ப. 6377) என்பது முன்னர்க் கூறியது. அனலன் அவர்களுள் மூத்தவன். |
(9) |
9961. | 'விலங்கல் நாண மிடைதரு தோளினாய்! |
| இலங்கை மா நகர் யான் வரும் எல்லை, நீ |
| கலங்கலா நெடுங் காவல் இயற்று' எனா, |
| அலங்கல் வீரன் அடி இணை எய்தினான்.* |
|
(வீடணன்) விலங்கல் நாண மிடைதரு தோளினாய்!- மலைகளும் வெட்கமுறும்படி அவற்றினும் பெரிதாக நெருங்கி |