இருக்கின்ற தோள்களை உடைய அனலனே!; நீ யான் இலங்கை மாநகர் வரும் எல்லை- நீ! யான் (இராமனோடு அயோத்தி சென்று) இலங்கை நகரத்துக்குத் திரும்பி வரும் வரை; கலங்கலா நெடுங்காவல் இயற்று- உயிர்கள் யாவும் கலக்கம் உறாதபடி நீண்ட காவலைச் செய்வாயாக; எனா- என்று சொல்லி (அவனை அரசப் பிரதிநிதியாக ஆக்கி); அலங்கல் வீரன் - மாலை அணிந்த வீரனாகிய இராமபிரானது; அடி இணை எய்தினான் - திருவடி இணைகளை வந்து அடைந்தான். |
வீடணன் இராமனைப் பிரியாது அயோத்தி செல்லும் எண்ணம் உடையவனாய் இருந்தான் என்பது இதனால் விளங்கும். |
(10) |
வீடணற்கு இராமன் நீதி கூறல் |
9962. | குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி, |
| அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும், |
| பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத் |
| திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்:* |
|
அரக்கர் கோமகனோடு- அரக்கர்க்கு அரசன் ஆகிய வீடணனோடு; குரக்கு வீரன் - வானர வீரன் என்று சிறப்பித்து உரைக்கப்படும் அனுமன்; அரசு- வானர வேந்தனாகிய சுக்கிரீவன்; இளங்கோளரி- வானர இளவரசாகிய சிங்கம் போன்ற அங்கதன் (ஆகியோர்) அடி தாழ்தலும்- (இராமபிரானது அடிகளில் வணங்குதலும்; அத்திருக்கொள் மார்பன் புகல் புக்கவன் - அந்த இராமன் (தன்னிடத்தில்) அடைக்கலம் புகுந்தவனாகிய வீடணனைப்; பொருக்கென- விரைவாக; புல்லி- எடுத்துத் தழுவி;இனையன செப்பினான் - இத்தகைய நீதிகளை எடுத்துரைத்தான். |
அனுமன், சுக்கிரீவன், அங்கதன் முதலானோர் வீடணனது பட்டாபிஷேகத்துக்கு இலக்குவனுடன் சென்றோர். |
(11) |
9963. | 'உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம் |
| பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது, |
| இருமை ஏய் அரசாளுதி, ஈறு இலாத் |
| தரும சீல!' என்றான் - மறை தந்துளான்.* |
|
மறை தந்துளான் - நான்கு வேதங்களையும் வெளியிட்டருளிய இராமபிரான்; ஈறு இலாத் தருமசீல!- முடிவில்லாத அற |