பக்கம் எண் :

 மீட்சிப் படலம்427

இப்புறத்து- இவ்விடத்தில்; இன- இந்நிகழ்ச்சிகள்; எய்துறு
காலையில்
- நடக்கும் பொழுது; அப்புறத்ததை உன்னி- மேல்
நடக்க வேண்டியவைகளை (இராமன்) மனத்தில் கருதி; அனுமனை
- அனுமனை அழைத்து; துப்பு  உறச் செய்ய  வாய்  மணித்
தோகைபால் போய்
- பவழத்தை ஒத்துச் சிவந்த வாயை உடைய
அழகிய  மயில்போல்வாளாகிய  சீதையிடம்  சென்று;  இப்படி
செப்புறு
-  இங்கு நடந்த  செய்திகளைச் சொல்வாயாக;  எனச்
செப்பினான்
- என்று கூறினான்.
 

இப்படி - இத்தன்மைகள் என்றாகும். இங்கு நடந்த தன்மைகள்.
அவை இராவணவதமும் வீபீடண பட்டாபிஷேகமும் சிறை மீட்சியும்
ஆகும். 'துப்பு உறச் செய்ய வாய்' என்பது பவழத்தைச் சிவப்புறச்
செய்யும் சிவந்த வாய் என்றுமாம். 
   

(14)
 

அனுமன் சீதையிடம் கூறுதல்
  

9966.

வணங்கி, அந்தம் இல் மாருதி, மா மலர் 

அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்: 

உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என, 

சுணங்கு நோய் முலையாட்கு இவை சொல்லுவான்: 

 

அந்தம் இல் மாருதி- அழிவற்ற சிரஞ்சீவியாகிய அனுமன்;
வணங்கி- (இராமனை) வணங்கி விடைபெற்றுச் சென்று; மாமலர்
அணங்கு சேர்  கடிகாவு  சென்று  அண்மினான்
-  சிறந்த
தாமரை  மலரில்  வீற்றிருக்கும்  திருமகளாகிய   சீதாபிராட்டி
தங்கியுள்ள காப்பமைந்த அசோக  வனத்தை  நெருங்கிச் சென்று
அடைந்து; சுணங்கு நோய்  முலையாட்கு-  தேமல்   பரவிய
நகில்களை உடைய பிராட்டிக்கு;  உணங்கு  கொம்புக்கு உயிர்
வரு நீர்  என
- காய்ந்து போன கிளைக்கு  உயிர் வருதற்குக்
காரணமான  நீரைப்  போல;  இவை- (பிராட்டிதளிர்த்தற்குக்
காரணமான) இந்தச் செய்திகளைச்;  சொல்லுவான் - சொல்லத்
தொடங்கினான்.
 

''என்றும் ஓர் துளி வரக் காணா நன் மருந்து போல் நலன்
அற உணங்கிய நங்கை''யைத் தளிர்க்கச் செய்தலின் அனுமன்
கூறிய செய்திகள் நீர் எனப் பெற்றன; அனுமனும் சிரஞ்சீவி
ஆதலின் ''அந்தம் இல் மாருதி'' எனப்பட்டான். 
 

(15)
 

9967.

'ஏழை சோபனம்! ஏந்திழை, சோபனம்! 

வாழி, சோபனம்! மங்கல சோபனம்!