பக்கம் எண் :

 மீட்சிப் படலம்429

தாரணி தாங்கிய மலை  கிடந்தன  போல்-  பூமியைத்
தாங்குகிற மலைகள் கீழே  விழுந்து  கிடந்தன போல;  தலை
கிடந்தன
- (இராவணனது)  பத்துத்  தலைகள் கீழே கிடந்தன;
மணித் தோள் எனும் - அழகிய தோள்கள் என்கின்ற; அலை
கிடந்தன
- கடல் அலைகள்  கிடந்தன;உடல்-  இராவணனது
உடம்பு; நிலத்தே-  பூமியின்கண்;  ஆழி  கிடந்தென- கடல்
கிடந்தது என்று சொல்லும் படி; நிலை கிடந்தது- அசையாமல்
கிடந்தது; என்றான் - என்று (அனுமன்) கூறினான்.
 

பத்துத் தலைகளும் மலைகள் போல் ஆயின. கடல் கிடந்தது
போல்  உடல்  கிடந்தது. ஆகவே பக்கத்தில்  உள்ள  இருபது
தோள்களும் கடல் அலைகள் போல் உள்ளன எனப் பெற்றது. 
 

(18)
 

9970.

'அண்ணல் ஆணையின், வீடணனாம் மறக் 

கண் இலாதவன் காதல் தொடர்தலால், 

பெண் அலாது, பிழைத்துளதாகும்' என்று 

எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால்' என்றான். 

 

அண்ணல்   ஆணையின்-   தலைவனான   இராமபிரானது;
ஆணையாலும்;  வீடணனாம்-   வீடணன்   என்று   கூறப்படும்;
மறக்கண்  இலாதவன்-   கொடுமையற்ற  அறவாளனது; காதல்
- அன்பு;  தொடர்தலால் -   இடைவிடாது இருத்தலாலும்; பெண்
அலாது  பிழைத்து  உளதாகும்  என்று   எண்ணலாவது  ஓர்
பேர் இலது
-  (இலங்கையில்)  பெண்மக்கள்   அல்லாமல்   உயிர்
பிழைத்துள்ளவர் என்று நினைக்கத்தக்க ஆடவர் ஒருவர் கூட இல்லை.
 

வீடணன் அன்பும் இராமன் ஆணையும் இலங்கையை அடியோடு
அழித்தது. போர்க்கு வராதவர் ஆதலின் பெண்மக்கள்
பிழைத்தனர். ஆல் அசை.
 

 (19)
 

பிராட்டியின் மகிழ்ச்சி நிலை
 

9971.

ஒரு கலைத் தனி ஒண் மதி நாளொடும் 

வரு கலைக்குள் வளர்வது மானுறப் 

பொரு கலைக் குலம் பூத்தது போன்றனள் - 

பருகல் உற்ற அமுது பயந்த நாள். 

 

(அநுமன் கூறிய நற்செய்திகளைக் கேட்ட பிராட்டி) பருகல்
உற்ற அமுது பயந்த நாள்
- பருகுதற்கினிய தேவர் அமுதம்