நெடு விறலோய்! இவர் குசையின் தீவினின் உறைபவர் - நீண்ட வெற்றியை உடையவனே! இவர்கள் குசைத்தீவில் வாழ்பவர்கள்; கூற்றுக்கும் விதிக்கும் வசையும் வன்மையும் வளர்ப்பவர் - யமனுக்கும் பிரமனுக்கும் பழியையும் வலிமையையும் வளர்க்கின்றவர்; வானநாட்டு உறைவார் இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது, இங்கு இவரால்- வானுலகில் வாழ்கின்ற தேவர்கள் தம் புகழையும் செல்வத்தையும் இருப்பிடத்தையும் இழந்தது இங்குள்ள இவராலேயாம்; விசையம் தாம் என நிற்பவர் - வெற்றி என்றால் அதற்குப் பொருள் தாமே என்னுமாறு வெற்றியே பெற்று நிற்கும் இயல்பினர் ஆவார். |
குசை - தருப்பைப்புல். அது நிறைந்திருந்தமை பற்றி அத்தீவு குசைத்தீவு எனப் பெயர் பெற்றது. கூற்றுக்கு வசையும், விதிக்கு வன்மையும் என இயையும். கூற்று இவர் உயிரைக் கொள்ள வியலாமையால் வசை. அங்ஙனம் இவர் உயிரைக் கொள்ளவியலாதவாறு படைத்தமையால் பிரமனுக்கு வலிமை என்பதாம். விசையம் - வெற்றி. சென்ற போர் தோறும் வெற்றியே பெற்று வருதலின் வெற்றியே இவர்கள் தாமோ எனப் பிறர் வியக்குமாறு வாழ்பவர் என்றவாறு, விசயம் என்ற சொல் எதுகை நோக்கி விசையம் எனவாயிற்று. |
(11) |
9258. | 'இலவத் தீவினின் உறைபவர், இவர்கள்; பண்டு |
| இமையாப் |
| புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப் |
| பொருதார்; |
| நிலவைச் செஞ் சடை வைத்தவன் வரம் தர, |
| நிமிர்ந்தார்; |
| உலவைக் காட்டு உறு தீ என வெகுளி |
| பெற்றுடையார். |
|
இவர்கள் இலவத்தீவினில் உறைபவர்- இவர்கள், இலவத் தீவினில் வாழ்பவர்கள்; இமையாப் புலவர்க்கு இந்திரன்- இமையா நாட்டமுடைய தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனது; பொன்னகர் அழிதரப் பண்டு பொருதார் - பொன்மயமான அமராவதி நகரம் அழிவெய்துமாறு முன்பு போர் செய்தவர்கள்; நிலவைச் செஞ்சடை வைத்தவன் வரம் தர, நிமிர்ந்தார் - பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் வைத்த சிவபிரான் வரம் தந்தமையால் மேன்மை பெற்றவர்கள்; உலவைக் காட்டுஉறு தீஎன |