பக்கம் எண் :

430யுத்த காண்டம் 

கடைந்தெடுத்த நாளில்; ஒரு கலைத் தனி ஒண் மதி- ஒற்றைக்
கலை அளவினதாகிய சந்திரன்; வருகலைக்குள் வளர்வது மானுற-
ஒவ்வொன்றாக வருகின்ற  கலைகளால்  தன்னுள் தானே வளர்ந்து
பதினாறு கலைகளும் நிரம்பிய முழு மதியானது போல என்னும்படி;
பொரு கலைக்குலம் பூத்தது போன்றனள்- நெருங்கிய கலைகளின்
தொகுதி நிரம்பப் பெற்று பொலிவெய்தியதைப் போன்று தழைத்தாள்.
 

அமுதம் கடைந்த  பொழுது  சந்திரன் திருப்பாற்கடலில்
தோன்றியது   ஆதலின்  'அமுது  பயந்த   நாள்'  என்றார்.
ஒருகலையாக   முதலில்  தோன்றித்  தன்னுள்ளே  கலைகள்
வளரப் பெற்று முழுமதியானது போல பிராட்டியும் தன்னுள்ளே
மகிழ்ச்சியால் பூத்துப் பொலிவெய்தினாளாம். 
  

(20)
 

9972.

ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட, 

தேம்பும் நுண் இடை நோவ, திரள் முலை 

ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் - 

பாம்பு கான்ற பனி மதிப் பான்மையாள். 

 

பாம்பு கான்ற   பனிமதிப்   பான்மையாள் - இராகுவால்
(விழுங்கிக்)  கக்கப்   பெற்ற   குளிர்ந்த   நிலவைப்   போன்ற
தன்மை உடைய பிராட்டி (அநுமன் சொல்லால்); ஆம்பல் வாயும்
முகமும் அலர்ந்திட
- ஆம்பல் மலரை ஒத்த   சிவந்த   வாயும்
முகமும் மேலும்  ஒளி விளங்க; தேம்பும் நுண் இடை நோவ-
முன்பே   தேய்ந்து வருந்தும்   சிறிய   இடையானது   மேலும்
வருந்தும்படி; திரள் முலை-  திரண்டுருண்ட  நகில்   தடங்கள்;
ஏம்பல் ஆசைக்கு- மகிழ்ச்சி மேலெழும் ஆசையால்; இரட்டி
வந்து  எய்தினாள்
- (முன்பிருந்ததை விட)  இரண்டு  மடங்கு
வளர்ந்து பொருந்தப் பெற்றாள்.
 

'ஆசையால்' என்னும் மூன்றாவதன்கண் 'ஆசைக்கு' என
நான்காவது வந்தது. உருபு மயக்கம். 
 

(21)
 

9973.

புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ, 

உந்தி ஓங்கும் ஒளி வளைத் தோள்கொலோ, 

சிந்தி ஓடு கலையுடைத் தேர்கொலோ - 

முந்தி ஓங்கின யாவை - முலைகொலோ? 

 

முந்தி ஓங்கின- (பிராட்டியிடத்தில்) முற்பட்டு வளர்ந்தவை;
புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ- மனத்திற்குள் உண்டாகும்