மகிழ்ச்சிப் பூரிப்போ; உந்தி ஓங்கும் ஒளி வளைத் தோள்கொலோ- தள்ளப்பட்டு மேல் எழும்புகின்ற ஒளிபொருந்திய வளையலை அணிந்த தோள்களா?; சிந்தி ஒடு கலை உடைத் தேர்கொலோ- அவிழ்ந்து விலகி விடுகின்ற ஆடையை அணிந்துள்ள தேர் போன்ற அல்குல் தடமா?; முலைகொலோ- தனங்களா? |
இது கவிக்கூற்று. பிராட்டியிடம் தோன்றிய மகிழச்சி மிகுதியைக் கவிஞர் இவ்வாறு கூறினார். |
(22) |
9974. | குனித்த, கோலப் புருவங்கள்; கொம்மை வேர் |
| பனித்த, கொங்கை; மழலைப் பணிமொழி |
| நுனித்தது ஒன்று, நுவல்வது ஒன்று, ஆயினாள்;- |
| கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ? |
|
கோலப் புருவங்கள் குறித்த- அழகிய புருவங்கள் வளைந்துள்ளன;கொங்கை கொம்மை வேர் பனித்த - முலைகள் திரண்டு வியர்வை அரும்பப் பெற்றன; மழலைப் பணிமொழி- மழலையான இன்சொற்களைப் பேசுமவளாகிய பிராட்டி (இப்போது); நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று ஆயினாள்- தான் மனதில் கருதியது ஒன்றும் சொல்லுவது ஒன்றும் ஆகப் பெற்றாள்; கனித்த இன்களி- முற்றிய இனிய மகிழ்ச்சியானது; கள்ளினின் காட்டுமோ- கள்ளுண்டார்க்கு நிகழும் மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்குமோ. |
இதுவும் கவிக்கூற்று. புருவம் வளைதல், வியர்வை அரும்பல், பேச்சு குழறல். இவை கள்ளுண்டார் பால் நிகழ்வன; மகிழ்ச்சி மிகுதியடைந்த பிராட்டியின் பாலும் இவை நிகழவே இவ்வாறு கூறினார். |
(23) |
9975. | அனையள் ஆகி, அனுமனை நோக்கினாள், |
| இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் |
| நினைவு இலாது நெடிது இருந்தாள் - நெடு |
| மனையின் மாசு துடைத்த மனத்தினாள். |
|
நெடுமனையின் மாசு துடைத்த மனத்தினாள் - உயர்ந்த இல்வாழ்க்கையின் குற்றத்தை அறப்போக்கிய சீரிய மனத்தை உடைய பிராட்டி; அனையள் ஆகி- மேற்சொல்லிய மகிழ்ச்சி விம்மிதம் உடையவளாகி; அனுமனை நோக்கினாள் - அனுமனைப் பார்த்தாள்; இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் நினைவு |