பக்கம் எண் :

436யுத்த காண்டம் 

இவர் - இவ் வரக்கியரது; குடல் குறைத்து- குடலை வெட்டி;
குருதி குடித்து- இரத்தத்தைக்  குடித்து;  உடல்  முருக்கியிட்டு
உண்குவேன்
- உடலைத்  துண்டாக்கி  உண்பேன்;  என்றலும்-
என்று அனுமன் கூறிய அளவில்;  அடல்  அரக்கியர்- வலிமை
படைத்த  அரக்கிமார்கள்;  அன்னை- தாயே!;  நின்  பாதமே
மெய்ச்சரண்
- நின்னுடைய திருவடிகளே எங்களுக்கு உண்மையான
புகலிடம்;  விடலம்- விடமாட்டோம்;  என்று  விளம்பலும்-
என்று சொல்லுதலும். 
 

(33)
 

9985.

அன்னை, 'அஞ்சன்மின், அஞ்சன்மின்! நீர்' எனா, 

மன்னும் மாருதி மா முகம் நோக்கி, 'வேறு 

என்ன தீமை இவர் இழைத்தார், அவன்

சொன்ன சொல்லினது அல்லது? - தூய்மையோய்!* 

 

அன்னை-   தாயாகிய   பிராட்டி; நீர் அஞ்சன்மின்
அஞ்சன்மின்  எனா
- (அரக்கியர்களைப் பார்த்து)  நீங்கள்
பயப்படாதீர்கள் என்று சொல்லி; மன்னும் மாருதி மாமுகம்
நோக்கி
- நிலைபெற்ற அனுமனது சீரிய முகத்தைப்  பார்த்து;
தூய்மையோய்- பரிசுத்தமானவனே; இவர் - இவ் வரக்கியர்;
அவன் சொன்ன சொல்லினது அல்லது- அந்த இராவணன்
ஏவிய சொற்களைச்  சொன்னது அல்லாமல்;  என்ன  தீமை
இழைத்தார்
-   (தாமாக)  என்ன   தீமையை   எனக்குச
செய்தார்கள்? (என்று கேட்டாள்) 
 

(34)
 

9986.

'யான் இழைத்த வினையினின் இவ் இடர் - 

தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்! 

கூனியின் கொடியார் அலரே, இவர்!

போன அப் பொருள் போற்றலை, புந்தியோய்!* 

 

தாயினும்  அன்பினோய்-  தாயைக்   காட்டிலும் என்பால்
அன்புடையவனே!; புந்தியோய்-   அறிவாற்றலிற்   சிறந்தவனே!;
இவ் இடர்தான் யான் இழைத்த வினையினின் தான் அடுத்தது-
இச் சிறைத்துன்பம்  யான்  செய்த  தீவினை  காரணமாக  எனக்கு
வந்து   சேர்ந்தது;    இவர்-   இவ்   வரக்கியர்;   கூனியின்
கொடியார் அலரே
- கூனியை விடக் கொடியவர்கள   அல்லர்
அல்லவா; போன அப்பொருள் போற்றலை- நடந்து  முடிந்த
அந்நிகழ்ச்சிகளை மனத்திற் கொள்ளாதே (என்றான்.)