தானே திட்டமிட்டுச் செய்தவள் கூனி. அவளையே வாழ விட்டுள்ளபோது இராவணன் சொன்னதைச் செய்த இவர்கள் மேல் கோபிக்கலாகுமோ என்றாளாம். |
(35) |
9987. | 'எனக்கு நீ அருள், இவ் வரம்; தீவினை |
| தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் |
| மனக்கு நோய் செயல்!' என்றனள் - மா மதி |
| தனக்கு மா மறுத் தந்த முகத்தினாள். * |
|
மாமதி தனக்கு மாமறு தந்த முகத்தினாள் - சிறந்த சந்திரனுக்கு பெரிய களங்கத்தைக் கொடுத்து கீழப்படுத்திய முகம் உடையவளாகிய சீதை (அனுமனைப் பார்த்து);நீ எனக்கு இவ்வரம் அருள்- நீ எனக்கு இந்த வரத்தைத் தருதல் வேண்டும்; தீ வினை தனக்கு வாழ்விடம் ஆய அழக்கியர் மனக்கு நோய் செயல் என்றனள்- கொடு வினைகளுக்குத் தங்குமிடமாகிய கொடிய இவ்வரக்கியர்களது மனத்துக்குத் துன்பம் செய்யாதே என்று கேட்டுக் கொண்டாள். |
மனத்துக்கு - மனக்கு; அத்துக் கெட்டது - வரம்பு கெட்ட மனம் உடைய அரக்கியர் என்பதை உணர்த்த அத்துக் கெட்டது எனலும் ஆம். |
(36) |
இராமன் வீடணனைச் சீதையை அழைத்து வருக எனல் |
9988. | என்ற போதின், இறைஞ்சினன், 'எம்பிரான் |
| தன் துணைப் பெருந் தேவி தயா' எனா |
| நின்ற காலை, நெடியவன், 'வீடண! |
| சென்று தா, நம தேவியை, சீரொடும்.* |
|
என்ற போதின்- என்று பிராட்டி கூறிய அளவில் (அனுமன்); 'எம்பிரான் தன் துணைப் பெருந்தேவி தயா' எனா- இராமபிரானது ஒப்பற்ற பெருந்தேவியாகிய பிராட்டியின் ஒப்பற்ற கருணை (இருந்தவாறு என்னே) என்று சொல்லி; இறைஞ்சினன் நின்ற காலை- வணங்கி நின்ற பொழுது; நெடியவன்- (அங்கே) இராமபிரான்; வீடண! - வீடணனே!; நம் தேவியை - நம்முடைய பிராட்டியை; சென்று சீரொடும்தா- சென்று சிறப்போடும் அழைத்து வருக; |
(37) |