9989. | என்னும் காலை, இருளும் வெயிலும் கார் |
| மின்னும் காலை இயற்கைய வீடணன் |
| 'உன்னும் காலைக் கொணர்தி' என்று ஓத, அப் |
| பொன்னின் கால் தளிர் சூடினன், போந்துளான். |
|
என்னும் காலை- என்று இராமன் கட்டளையிட்ட போது;இருளும் வெயிலும் - உடம்பால் காரிருளும், அணிகலன்களால் பகல் ஒளியும் உடையனாய்; கார் மின்னும் காலை இயற்கைய வீடணன் - மேகம் மின்னும் பொழுதுண்டாம் தன்மை படைத்த வீடணன்; உன்னும் காலைக் கொணர்தி என்று ஓத- நினைக்குமாத்திரத்தே அழைத்துக் கொண்டு வருக என்று இராமன் சொல்ல; போந்துளான் - உடனே அசோக வனத்துக்கு வந்து சேர்ந்து; அப்பொன்னின் கால் தளிர் துடினன்- அந்த சீதாப் பிராட்டியின் திருவடித் துளிர்களைத் தலைமேற் சூடி வணங்கினான். |
(38) |
வீடணன் பிராட்டியிடம் கூறல் |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
9990. | 'வேண்டிற்று முடிந்தது அன்றே; வேதியர் தேவன் |
| நின்னைக |
| காண்டற்கு விரும்புகின்றான்; உம்பரும் காண |
| வந்தார்; |
| ''பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை, வருத்தம் |
| போக்கி, |
| ஈண்டக் கொண்டு அணைதி'' என்றான்; எழுந்தருள், |
| இறைவி!' என்றான். |
|
இறைவி- தலைவியே! வேண்டிற்று முடிந்தது அன்றே- நீ விரும்பியது நிறைவேறி விட்டது அல்லவா; வேதியர் தேவன் நின்னைக் காண்டற்கு விரும்புகின்றான் - வேத பாரகர்களாகிய முனிவர்களின் வழிபடுகடவுளாகிய இராமபிரான் உன்னைக் காண்பதற்கு மிகவும் ஆசைப்படுகின்றான்; உம்பரும் காண வந்தார் - (நீங்கள் இருவரும் ஒன்று சேரும் காட்சியைத்) தேவர்களும் காண்பதற்குக் குழுமியுள்ளார்கள்; பூண்தக்க கோலம் வல்லை புனைந்தனை- அணிதற்குத் தகுதியான அலங்காரங்களை |