பக்கம் எண் :

44யுத்த காண்டம் 

வெகுளி பெற்றுடையார்- உலர்ந்த மரங்கள் நெருங்கிய
காட்டில் பற்றிய தீப்போல் பெருங்கோபம் கொண்டவர்கள்.
 

இலவ மரங்கள் நிறைந்த தீவாகலின் 'இலவத்தீவு' எனப்பட்டது. 
இமையாப்புலவர் - கண்ணிமைத்தலில்லாத தேவர்கள். பொன்னகர் 
- பொன்னமராவதி. குற்றம் செய்து சாபம் பெற்ற சந்திரனையே 
முடிமிசை வைத்த அருளாளன் முக்கட் பெருமான் ஆகலின் தீமையே 
புரியினும் அவர்தம்   தவத்திற்காக   வரம் நல்கினான் என்பதாம். 
உலவை - உலவை மரம். காட்டுத்தீ   விரைந்து பரவுந் தன்மையது. 
அதுவும் உலர்ந்த மரங்கள் நெருங்கிய காடெனில் பெருந்தீக்கதுமென
பரவுமன்றோ? அத்தகைய கடுங்கோபத்தினர் இவர்கள் என்றவாறு. 
 

(12)
 

9259.

'அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை 

அமரர்க்கு

என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக் 

குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் 

குலைந்தோர்

சென்று, 'இத் தன்மையைத் தவிரும்' என்று 

இரந்திடத் தீர்ந்தோர்.

 

இவர் அன்றில் தீவினின் உறைபவர்- இவர்கள் அன்றில்
தீவில்   வாழ்பவர்கள்;   அமரர்க்கு   என்றைக்கும் இருந்து
உறைவிடம் என்றிட
-   தேவர்கட்கு   எக்காலத்தும் இருந்து
வாழ்கின்ற இடம் இது என்று பிறர் கூறிய அளவில்; மேருக்குன்றைக் 
கொண்டு    போய்    பண்டைக்    குரைகடல் இட

அம்மேருமலையினைப்    பெயர்த்துக்    கொண்டு   போய்ப்
பண்டைக்காலத்தில்   ஒலிக்கின்ற   கடலில்   இட முயலாநிற்க;
அறக்குலைந்தோர் சென்று- மிகவும் நிலை குலைந்தவர்களாகிய
அத்தேவர்கள் சென்று; இத்தன்மையைத் தவிரும் என்று
இரந்திடத் தீர்ந்தோர்
- 'இந்தச் செயலைக் கைவிடுங்கள்' என்று 
இரந்து கேட்டுக்கொள்ள அச்செயலை விடுத்த வீரமுடையவர்கள்.
 

அன்றில் தீவு - அன்றில் பறவைகள் நிறைந்த தீவாகலின்
இப்பெயர் பெற்றது. இதனைக் கிரௌஞ்சம் என்பர் வடமொழியாளர். 
அறக்குலைதல் - மிகவும் நிலை குலைதல். 
 

(13)
 

9260.

'பவளக் குன்றினின் உறைபவர்; வெள்ளி பண்பு 

அழிந்து, ஓர்

குவளைக் கண்ணி, அங்கு, இராக்கதக் கன்னியைக்  

கூட,