| அவளின் தோன்றினர், ஐ-இரு கோடியர்; நொய்தின் |
| திவளப் பாற்கடல் வறள்படத் தேக்கினர், சில நாள். |
|
பவளக் குன்றினின் உறைபவர் - (இவர்கள்) பவளக் குன்றினில் வாழ்பவர்கள்; வெள்ளி பண்பு அழிந்து ஓர் குவளைக் கண்ணி - சுக்கிரன் குணங்கெட்டு (க்காமுகனாகி) ஒரு குவளை மலர் போன்ற கண்களை உடையவளான; இராக்கதக் கன்னியை அங்கு கூட- அரக்கர் குலக்கன்னிகையை அவ்விடத்துப் புணர; அவளின் தோன்றினர் ஐ- இரு கோடியர் - அவளிடத்துத் தோன்றியவர் பத்துக்கோடி என்னும் தொகையினராவர்; திவளப் பாற்கடல் வறள்பட நொய்தின் சிலநாள் தேக்கினர் - வெண்ணிறமுடைய பாற்கடல் வற்றுமாறு எளிதாக சில நாட்களில் பருகினவர்கள். |
பவளம் நிறைந்த தீவு பவளக்குன்று எனப்பட்டது வெள்ளி - அசுர குருவாகிய சுக்கிரன். |
(14) |
9261. | 'கந்தமாதனம் என்பது, இக் கருங் கடற்கு அப் பால் |
| மந்தமாருதம் ஊர்வது ஓர் கிரி; அதில் வாழ்வோர், |
| அந்த காலத்து அவ் ஆலகாலத்துடன் பிறந்தோர்; |
| இந்த வாள் எயிற்று அரக்கர் எண் |
| இறந்தவர் - இறைவ! |
|
இறைவ! இந்த வாள் எயிற்று அரக்கர்- அரசே! இந்த வாள் போன்ற கோரைப் பல்லினை உடைய அரக்கர்கள்; இக்கருங்கடற்கு அப்பால் மந்த மாருதம் ஊர்வது- இந்தக் கரிய கடலுக்கு அப்புறத்தே தென்றல் தவழ்கின்ற; கந்த மாதனம் என்பது ஓர் கிரி அதில் வாழ்வோர் - கந்த மாதனம் என்பதோர் மலை, அம்மலையில் வாழ்பவராவார்; அந்த காலத்து அவ்ஆல காலத்துடன் பிறந்தோர் எண்ணிறந்தவர் - (பாற்கடல் கடையப் பெற்ற) அந்தக் காலத்து ஆலகாலத்தோடு உடன் பிறந்தவர் என்று சொல்லத் தக்கவர் எண்ணிக்கை இல்லாதவர். |
(15) |
9262. | 'மலயம் என்பது பொதிய மாமலை; அதில் மறவோர் |
| நிலயம் அன்னது சாகரத் தீவிடை நிற்கும்; |